நானே வருவேன்.. இன்னும் எத்தனை போஸ்டர் தான்ப்பா வரும்.. அப்போ பர்த்டேக்கு டீசர் இல்லையா?

சென்னை: நடிகர் தனுஷின் பிறந்தநாள் நாளை கொண்டாடவுள்ள நிலையில், நானே வருவேன் படத்தின் புதிய போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

முன்னதாக தனுஷ் நடிப்பில் பைலிங்குவல் படமாக உருவாகி வரும் வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.

திருச்சிற்றம்பலம் படத்தில் இருந்து லைஃப் ஆஃப் பழம் பாடலும் வெளியாகி உள்ளது. ஆனால், நானே வருவேன் படத்தின் டீசரை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.

தனுஷ் பிறந்தநாள்

தனுஷ் பிறந்தநாள்

நடிகர் தனுஷ் நாளை தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கோலிவுட், டோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என அசத்தி வரும் தனுஷுக்கு உலகம் முழுக்க இருக்கும் அவரது ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஹாலிவுட் இயக்குநர்களையே ரசிகர்களாக மாற்றி வைத்திருக்கிறார் நடிகர் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஹாலிவுட்

மீண்டும் ஹாலிவுட்

தி கிரே மேன் திரைப்படம் வெளியாகி ஓடிடியில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அதில், தனுஷ் வரும் காட்சிகள் அட்டகாசம் என்றும் தி கிரேமேன் சீக்வெல் மற்றும் ஸ்பின் ஆஃப் படங்களில் தனுஷ் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். தனுஷின் நடிப்பை ஹாலிவுட் ரசிகர்களே வியந்து பாராட்டி வருகின்றனர்.

வாத்தி ஃபர்ஸ்ட் லுக்

வாத்தி ஃபர்ஸ்ட் லுக்

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. நடிகர் தனுஷ், ஏகப்பட்ட படங்களில் நடித்து வரும் நிலையில், இந்த பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு பல சர்ப்ரைஸ்கள் காத்திருக்கும் என எதிர்பார்த்ததை போலவே ஒவ்வொரு படக்குழுவும் புதிய போஸ்டர்களையும் அப்டேட்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

தனுஷ் கையில் தனுஷ்

தனுஷ் கையில் தனுஷ்

தனுஷ் என்றாலே வில் என்று தான் பொருள். ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் இப்படி வில் அம்புடன் தனுஷ் வருவார் என எதிர்பார்த்த நிலையில், தற்போது நானே வருவேன் படத்தின் புதிய போஸ்டரில் வில் அம்புடன் நடிகர் தனுஷ் படு மாஸாக போஸ் கொடுத்துள்ளார். த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் பல வித லுக்குகளில் தனுஷ் காட்சியளித்து வருகிறார். கூடவே, இயக்குநர் செல்வராகவனும் எப்படி மிரட்டப் போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

டீசர் இல்லையா

டீசர் இல்லையா

தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நானே வருவேன் படத்தின் டீசர் ஆவது வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு புதிய போஸ்டர் மட்டுமே என கலைப்புலி எஸ் தாணு அறிவித்த நிலையில், தனுஷ் ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X