வெளியானது வாத்தி படத்தின் டீசர்.. தனுஷ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சூப்பர் ட்ரீட்!

சென்னை : நடிகர் தனுஷ் இன்றைய தினம் தன்னடைய 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இன்றைய தினம் பிறந்தநாளிலும் கொண்டாட்டங்களில் ஈடுபடாமல் தன்னுடைய நானே வருவேன், திருச்சிற்றம்பலம் படங்களில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.

நேற்றைய தினம் அவரது நடிப்பில் உருவாகியுள்ள நானே வருவேன், வாத்தி படங்களில் போஸ்டர்கள் வெளியாகின.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

தனுஷ் அடுத்தடுத்த சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். அவரது ஜகமே தந்திரம், அட்ராங்கி ரே மற்றும் மாறன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் நேரடியாக வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றன. அவரது படம் திரையரங்கில் வெளியாக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அவரும் எதிர்பார்த்து காத்திருந்தார்.

 திருச்சிற்றம்பலம் ரிலீஸ்

திருச்சிற்றம்பலம் ரிலீஸ்

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோரது நடிப்பில் திருச்சிற்றம்பலம் படம் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

ரிலீசுக்கு தயாராகும் வாத்தி, நானே வருவேன்

ரிலீசுக்கு தயாராகும் வாத்தி, நானே வருவேன்

இந்நிலையில் அடுத்தடுத்து அவரது நடிப்பில் நானே வருவேன் மற்றும் வாத்தி ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதில் நானே வருவேன் படத்தை அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கியுள்ளார். தனுஷின் பிறந்தநாளையொட்டி நேற்றைய தினம் இந்தப் படத்தின் போஸ்டர் வெளியானது.

வாத்தி படத்தின் டீசர் வெளியானது

வாத்தி படத்தின் டீசர் வெளியானது

தொடர்ந்து வாத்தி படத்தின் போஸ்டரும் நேற்றைய தினம் வெளியான நிலையில், இன்றைய தினம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில் படத்தில் ஆசிரியராக தனுஷ் நடித்துள்ளார். கல்வித்துறையில் ஏற்படும் தகிடுதத்தங்களை அவர் எதிர்ப்பதாக கதை நகரும் என்று தெரிகிறது. இந்தப் படத்தில் மிகவும் இளமையாக தனுஷ் காணப்படுகிறார்.

இருமொழிப்படம் வாத்தி

இருமொழிப்படம் வாத்தி


தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் இந்தப்படத்தின்மூலம் நேரடியாக தெலுங்கிலும் தனுஷ் அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் டீசரில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் அதிகமாக காணப்படுகிறது. ஜீரோ பீஸ் ஜீரோ கல்வி, அதிகமான பீஸ் அதிகமான கல்வி இதுதான் தற்போது ட்ரெண்ட் என்பதாக இந்த டீசர் துவங்குகிறது.

 வெங்கி அட்லுரி இயக்கம்

வெங்கி அட்லுரி இயக்கம்

படத்தை வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார். படத்தில் நாயகியாக சம்யுக்தா நடித்துள்ளார். படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜிவி பிரகாஷ். அவரது இசையில் படத்தின் பின்னணி இசையும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நட்சத்திர பட்டாளம்

நட்சத்திர பட்டாளம்

படத்தில் தனுஷ் சம்யுக்தா மேனனுடன் சாய் குமார், தனகெல்லா பரணி, சமுத்திரக்கனி, தொட்டப்பள்ளி மது, நரா ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பேரடி, பிரவீணா உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர்.

ரசிகர்களை கவர்ந்த டீசர்

ரசிகர்களை கவர்ந்த டீசர்

இந்தப் படத்தின் தலைப்பு ஏற்கனவே வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது தனுஷ் பிறந்தநாளையொட்டி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. விரைவில் படமும் வெளியாகி ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X