DHANUSH B'DAY: தனுஷ் பிறந்த நாள்.. இந்த பிறந்த நாள் தனுஷ்க்கு ஏன் ரொம்பவும் ஸ்பெஷல் தெரியுமா?

சென்னை: தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் தனுஷ். நடிப்பு அசுரன் என்று அவரது ரசிகர்களை கடந்து சினிமா ரசிகர்களுமே கொண்டாடும் அளவுக்கு திறமையான திரைக் கலைஞன் தனுஷ். இன்று தனது 43 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அவரது ரசிகர்கள் தொடங்கி, பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தனுஷ்க்கு இந்த பிறந்தநாள் வழக்கத்தைக் காட்டிலும் மிகவும் ஸ்பெஷலான பிறந்த நாள் என்று கூறும் அளவுக்கு தனுஷ் ரசிகர்கள் இந்த பிறந்த நாளைக் கொண்டாட தயாராகிவிட்டனர்.

நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், கதாசிரியர், பாடலாசிரியர், பாடகர் என தனது திறமைகள் மூலம் தொடர்ந்து ரசிகர்களுக்கு நாளுக்கு நாள் ஆச்சரியம் கொடுக்கும் திரைக் கலைஞனாக ஆச்சரியம் கொடுத்து வருகிறார் தனுஷ். நடிப்பு, தயாரிப்பு மற்றும் இயக்குநர் என மூன்று துறைகளில் ஐந்து தேசிய விருது வாங்கிவிட்டார். வெற்றி மாறனோடு இணைந்தால் தான் தனுஷ் தேசிய விருது வாங்குகிறார், மற்ற இயக்குநர்களுடன் அந்த மேஜிக் நடப்பதில்லை என்ற விமர்சனத்தை 72வது தேசிய விருது பட்டியல் மாற்றி அமைத்துள்ளது. சிறந்த நடிகராக கேப்டன் மில்லர் படத்திற்காக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடித்திருந்தார்.

Dhanush Birthday Why This 43rd Birthday Is the Most Special Milestone in the National Award Winner s Career

ரசிகர்கள் உற்சாகம்: அதேபோல் அவரே எழுதி இயக்கி நடித்த அவரது 50ஆவது படமான ராயன் படத்திற்கும் சிறந்த படம் என்ற விருதைப் பெறவுள்ளார். அதேபோல் சில தினங்களுக்கு முன்னர் அவரது ரசிகர்கள் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தனுஷின் ஃபயர் ஸ்பீச் அவரது அடுத்தகட்ட டார்கெட் என்பது அரசியல் தான் என்பதை தெளிவாக உணர்த்துகிறது என்பதை பலரும் தெரிவித்து வருகிறார்கள். மேலும் அதில் அவர் மற்றவர்கள் என்று குறிப்பிட்டு பேசியது ஒரு முன்னணி நடிகரின் ரசிகர்களின் நடவடிக்கையைத் தான் என்று பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

Dhanush Birthday Why This 43rd Birthday Is the Most Special Milestone in the National Award Winner s Career

ரொம்பவும் ஸ்பெஷல்: இந்த பிறந்த நாளில் இருந்து தனுஷின் ஒவ்வொரு பிறந்தநாளும் அவரது ரசிகர்களால் பெருமளவுக்கு கொண்டாடப்படவுள்ளது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. அதாவது இதற்கு முந்தைய பிறந்த நாட்களை விடவும் மிகவும் கவனமாக மக்கள் நலத்திட்டங்களுடன் கொண்டாடப்படவுள்ளது. அதற்கு காரணம் பலரும் அரசியல் என்ட்ரி தான் என்று கூறினாலும், ஒரு திரைக் கலைஞராக தனுஷ்க்கு அவரது படங்கள் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது மிகவும் பெருமைக்குரிய ஒன்று என்பதால் மிகவும் ஸ்பெஷலான பிறந்த நாள் என்பதில் சந்தேகம் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X