தனுஷ்க்கு போட்டி எந்த நடிகர்?.. அடடே தனுஷ்ஷே உடைச்சி பேசிட்டாரேப்பா.. ஹாலிவுட் ரிட்டன்னா சும்மாவா?

கோவை: இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து உருவாகி உள்ள படம் கர. இந்த படம் வரும் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தில் மமிதா பைஜு, கே.எஸ். ரவிக்குமார், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் புரோமோசன் வேலைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் புரோமோசான் விழா கோவையில் நடைபெற்றது. அதில் நடிகர் தனுஷ்ஷிடம் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா மட்டுமில்லாமல், தெலுங்கு சினிமா, பாலிவுட் சினிமா, ஹாலிவுட் சினிமா என எல்லா பக்கமும் கலந்து கட்டி அடித்துக் கொண்டு உள்ளார். இவரது கால்ஷீட் வாங்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறும் அளவுக்கு இவரிடத்தில் லைன் - அப்கள் உள்ளன.

Dhanush Breaks Silence I Have No Competitor Actor s Bold Statement Goes Viral

இவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் கர. இந்த படத்தைப் பார்த்த பின்னர் தனுஷ் பெரும் நம்பிக்கையுடன் இயக்குநர் விக்னேஷ் ராஜாவிடம் பகிர்ந்து கொண்ட தகவல்கள் பலரது கவனத்தை ஈர்த்தது. கர படம் மட்டும் பாக்ஸ் ஆபீஸில் பெறும் வெற்றியைப் பெற்றால், தமிழ் சினிமா உலகத்திற்கே பெரும் நம்பிக்கையும் புத்துணர்வும் கிடைக்கும். கதையை மட்டும் நம்பி படம் எடுத்தால் போதும் மக்கள் ஆதரிப்பார்கள், தேவையற்ற வித்தைகள் எல்லாம் செய்ய வேண்டியது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

தனுஷ் பதில்: இப்படி இருக்கையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் கோவையில் நடைபெற்றது. அதில், தனுஷ்ஷைப் பார்த்து இயக்குநரும் படத்தில் நடித்தவருமான கே.எஸ். ரவிக்குமார் கேட்ட கேள்வியும் அதற்கு தனுஷ் அளித்த பதிலும் பலரது கவனத்தை ஈர்த்தது. அதாவது, " ரஜினி - கமல், அஜித் - விஜய் என்று இருந்துள்ளது. அப்படி தனுஷ்க்கு போட்டி நடிகர் யார் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, அப்படி எல்லாம் யாரும் இல்லை, நான் எனக்கென தனி ரூட்டில் சென்று கொண்டு இருக்கிறேன் என்று பதில் அளித்தார். தனுஷ்ஷின் இந்த பதிலைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தனுஷ்ஷைப் பாராட்டி வருகிறார்கள்.

Dhanush Breaks Silence I Have No Competitor Actor s Bold Statement Goes Viral

பாராட்டு: குறிப்பாக, "தனுஷ் கூறியது போல தனுஷ்ஷின் ரூட் தனி ரூட் தான். தனுஷ் நடிப்பார், இயக்குவார், பாடுவார், பாடல் எழுதுவார், கதை எழுதுவார், தயாரிப்பார், தமிழ் சினிமா கடந்து நேரடியாக தெலுங்கு படம், இந்தி படம், ஹாலிவுட் படம் என நடித்துக் கொண்டு உள்ளார். தனுஷ் அவர் சொன்னது போல தனி ரூட்டில் பயணித்துக் கொண்டு இருக்கிறார்" என்று பாராட்டி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X