தனுஷைத் திருத்திய லப்பர் பந்து இயக்குநர்.. அடடே ஒரு படம் தனுஷையே மாத்திடுச்சே!
சென்னை: இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் லப்பர் பந்து. இந்த படத்தில் இவரது இயக்கத்தை பார்த்து பாராட்டிய தனுஷ் இவரது இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவும் தயார் என்று தெரிவிக்க, தற்போது இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படி இருக்கையில் நடிகர் கருணாஸ் மகனும் நடிகருமான கென் கருணாஸ் அறிமுக இயக்குநராக களமிறங்கியுள்ள படம் யூத். இந்த படத்தில் அவர் நடிக்கவும் செய்துள்ளார். இந்த படம் வரும் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய தனுஷ் லப்பர் பந்து படம் பார்த்த பின்னர் தான் செய்த திருத்தத்தை வெளிப்படுத்தினார்.

அப்பா - மகன்: தனுஷ் மற்றும் கென் இணைந்து அசுரன் படத்தில் நடித்துள்ளனர். இதில் தனுஷின் மகனாக கென் நடித்திருப்பார். நிகழ்ச்சியில் தனுஷ் பேசுகையில், " கருணாஸ் மற்றும் கிரேஸ் உங்களிடம் ஒரு குழந்தையை எப்படி வளர்ப்பது என்பதைக் கற்றுக் கொள்ளலாம். சாதனைகள் செய்யக் கூடிய, வெற்றிகளைக் குவிக்க கூடிய குழந்தயை வளர்த்து விடலாம். ஆனால் ஒரு நல்ல மனம் கொண்ட குழந்தையை வளர்ப்பது என்பது மிகவும் சிரமமானது. அப்பாவும் அம்மாவும் ரொம்பவும் சிரமப்படுகிறார்கள். எனவே குடும்பப் பொறுப்பை டக்கென எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற பொறுப்பு நீங்கள் வளர்த்த விதத்தில் தான் வந்தது.
கென் எனக்கு மகன்: கென் எனக்கு மகன் மாதிரி என்று சொல்வேன். அதன் பின்னர்தான் லப்பர் பந்து படம் வந்தது. அதில் அதென்ன மாதிரி? என்ற வசனம் வரும். கென் என் மகன்" என்று பேசினார். அவரது இந்தப் பேச்சை பார்த்த பலரும் தனுஷைப் பாராட்டி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் லப்பர் பந்து படத்தில் இதுபோன்ற காட்சியையும் வசனத்தையும் வைத்த இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்துவையும் பாராட்டி வருகிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றவுள்ளனர். அதற்கான கதை மற்றும் திரைக்கதை தயாரிக்கும் பணிகளில் தமிழரசன் பச்சைமுத்து தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தற்போது தனுஷ் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சாய் பல்லவி மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் தனுஷ் உடன் இணைந்து நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











