கேப்டன் மில்லர் படத்தின் கொம்பாரி வேட்டப்புலி பாடல் வெளியானது!

சென்னை: நடிகர் தனுஷ், கோலிவுட், பாலிவுட், டொலிவுட், ஹாலிவுட் என அனைத்திலும் தடம் பதித்து மாஸ்காட்டி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் என படங்கள் ஹிட்டடித்த நிலையில், தனுஷ் தற்போது, கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், இப்படத்தில் இருந்து, கொம்பாரி வேட்டபுலி என்ற பாடலின் லிரிக்கல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். இந்தப் படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படம் 1930 மற்றும் 40 காலகட்டத்தில் எடுக்கப்படும் படமாகும். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகிறது. இந்தப் படத்திற்கு மதன் கார்க்கி வசனம் எழுதி வருகிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு நாகூரன் படத்தொகுப்பு செய்கிறார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Dhanush captain millar movie kombari vettapuli lyrical song out

கேப்டன் திரைப்படத்தின் கதை சர்வதேச சினிமா ரசிகர்களையும் கவரக்கூடும் என்பதால், தயாரிப்பாளர்கள் படத்திற்காக ஒரு பெரிய பட்ஜெட்டை ஒதுக்கியுள்ளனர். தனுஷ் இதுவரை நடித்த படங்களை விட இத்திரைப்படம் அதிக பட்ஜெட்டிலும்,பெரும் பொருட்செலவிலும் உருவாகி உள்ளது.

தனுஷின் பிரம்மாண்டமான படம்: கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் தாங்கல் மண்டலத்தில் நடைபெற்ற போது, பாதுகாப்பு மண்டலத்தில் சட்டவிரோதமாக செங்குளம் கால்வாயின் குறுக்கே மரப்பாலம் அமைத்து, அதன் கரைகளை சேதப்படுத்தி, வனவிலங்குகளுக்கு இடையூறு விளைவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, படப்பிடிப்பு நடத்த மாவட்ட ஆட்சியர் தடை விதித்ததை அடுத்து, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு பின் முறையாக அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

Dhanush captain millar movie kombari vettapuli lyrical song out

மிரட்டலான டிரைலர்: இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12ந் தேதி வெளியாக உள்ளதால், இப்படத்தை தியேட்டரில் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். முன்னதாக இப்படத்தின் படத்தின் டீசர், பர்ஸ்ட் லுக் வெளியாகி மாஸ் காட்டிய நிலையில் அண்மையில் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான ஹைப்பை அதிகரித்துள்ளது. இந்த டிரைலரைப் பார்த்த ரசிகர்கள் இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் ஹிட் இதுதான் என்று இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்களும் மிரட்டியுள்ளது டிரைலரில் தெளிவாக தெரிகிறது.

Dhanush captain millar movie kombari vettapuli lyrical song out

கொம்பாரி வேட்டபுலி: கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாக உள்ளதால், படம் குறித்து அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது கொம்பாரி வேட்டபுலி பாடல் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், பிரியங்கா மோகனை தனுஷ் தேடி சென்று காதலிப்பது போன்ற வரிகள் இடம் பெற்றுள்ளன. பணக்கார வீட்டு பெண்ணாக இருக்கும் பிரியங்காவும்... சாதாரண நபராக இருக்கும் தனுசை காதலித்து எப்படி போராளியாக மாறுகிறார்கள் என்பதை இந்த பாடல் வரியில் இடம் பெற்றுள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், கொம்பாரி வேட்டபுலி பாடலை ரௌடி பேபி பாடல் புகழ் தீ பாடியுள்ளார். இணையத்தில் இந்த தற்போது டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X