தனுஷ்க்கு உசுரே டைரக்ஷன் தான்! பிறந்த நாள் வாழ்த்து வீடியோவில் மிரட்டி விட்ட சன் பிக்சர்ஸ்!
சென்னை: நடிகர் தனுஷ் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இந்த பிறந்தநாள் தனுஷ்க்கு ஒரு வெற்றிகரமான நடிகரின் பிறந்த நாளாக மட்டும் இல்லாமல், ஒரு பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குநராகவும் கொண்டாடுகின்றார். நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் பட்டைதீட்டப்பட்ட வைரக்கல் என்றே கூறலாம். வைரக்கல்லுக்கு பல முகங்கள் இருந்தாலும், அனைத்து முகங்களிலும் எப்படி மிளிருமோ தனுஷும் நாளுக்கு நாள் சினிமாவில் தான் கால் பதித்த துறைகளில் மிளிர்கின்றார். பன்முகத் திறமை கொண்ட கலைஞன் எனக் கூறுவதற்கு தனுஷ் மிகவும் பொருத்தமானவர்.
தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் ராயன். இந்த படம் தனுஷின் 50வது படம். இந்தப் படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ராயன் படம் கடந்த 26ஆம் தேதி ரிலீஸ் ஆகி திரயரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு உள்ளது. முழுக்க முழுக்க அதிரடி சண்டைக் காட்சிகளால் நிரம்பியுள்ள இந்த படத்திற்கு சென்சார்போர்டு தரப்பில் ஏ சர்டிஃபிகேட் வழங்கப்பட்டது. படம் பார்த்த ரசிகர்கள் படத்தினைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு ராயன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து சிறப்பான பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ராயன் படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர்களுக்கு தனுஷ் எவ்வாறு நடிக்க கற்றுக்கொடுத்தார் என்பது அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
இயக்குநர்: குறிப்பாக ஒவ்வொரு காட்சிக்கும் தனுஷ் எடுத்துள்ள முயற்சி அந்த வீடியோவைப் பார்க்கும்போது தெரிகின்றது. பாடல் காட்சிகளில் எவ்வாறு நடந்து வரவேண்டும், எந்த மாதிரி உடல் மொழி இருக்க வேண்டும், எந்த மாதிரியான முகபாவணை இருக்க வேண்டும் என சொல்லிக் கொடுகின்றார். அடங்காத அசுரன் நான் பாடலில் எஸ்.ஜே. சூர்யாவுக்கு நடனமாட சொல்லிக் கொடுக்கின்றார். அதேபோல் பிரகாஷ் ராஜிடம் அவர் எத்தனை முறை அந்த சிகரெட் பிடிக்க வேண்டும் என சொல்லிக் கொடுக்கின்றார்.

தீவிரமான அற்பணிப்பு: துஷாரா விஜயன், செல்வராகவன் உள்ளிட்டோருக்கு காட்சிகளை விளக்கி நடிக்க கற்றுக்கொடுக்கின்றார். செல்வராகவனுக்கு மேக்-அப் போட்டு விடுகின்றார். அடங்காத அசுரன் பாடல் தனக்கு எப்படி வேண்டும் என் பிரபுதேவாவிடம் கேட்கின்றார். ஒளிப்பதிவு குழுவினரிடம் இந்த ஷாட்க்கு தனக்கு இந்த ஏங்கில் வேண்டும், இவ்வளவு க்ளோசப் வேண்டும் என கூறுகின்றார். இப்படி வீடியோ முழுவதும் ஒரு இயக்குநராக தனுஷ் எவ்வாறு ராயன் படப்பிடிப்புத் தளத்தில் தீவிரமாக செயல்பட்டுள்ளார் என்பதுதான் உள்ளது.
பிறந்த நாள் வாழ்த்து: மொத்தம் ஒரு நிமிடம் 38 நொடிகள் இருக்கக்கூடிய இந்த வீடியோவுக்கு படத்தில் இடம் பெற்றுள்ள மூன்று பாடல்கள் பின்னணியில் இசைக்கப்படுகின்றது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இயக்குநர் தனுஷ் என குறிப்பிட்டுள்ளது. இந்த வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் நள்ளிரவு 12 மணிக்கு ரிலீஸ் செய்துள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். அதேபோல் கமெண்ட்டில் தனுஷ்க்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











