அப்பா கஸ்தூரி ராஜாவின் 70வது பிறந்தநாள்... தனியாக வந்த தனுஷ்

சென்னை : தமிழ் சினிமாவின் பிரபலமான டைரக்டர்களில் ஒருவர் கஸ்தூரி ராஜா. கிராமத்து கதைகளை, கிராமிய மணம் மாறாமல் அப்படியே தந்து வெற்றி பெற்ற டைரக்டர்களில் பாரதிராஜாவிற்கு அடுத்த இடம் கஸ்தூரி ராஜாவிற்கு உண்டு என்றே சொல்லலாம்.

சினிமாவில் சேருவதற்காக வீட்டை விட்டு ஓடி வந்து, மில்லில் வேலை செய்து, பிறகு டைரக்டர் விசுவுடன் இணைந்து 16 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றினார். 1991 ம் ஆண்டு ராஜ்கிரண் நடித்த என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமானார்.

ஆத்தா உன் கோயிலிலே, சோலையம்மா, தாய் மனசு, நாட்டுப்புற பாட்டு, எட்டுப்பட்டி ராசா, வீர தாலாட்டு, என் ஆசை ராசாவே, வீரம் விளைஞ்ச மண்ணு, கும்மி பாட்டு என வரிசையாக சூப்பர் ஹிட் கிராமத்து படங்களை இயக்கி கஸ்தூரி ராஜா, தனது மகன் தனுஷை வைத்து துள்ளுவதோ இளமை என்ற பதிர்வருவ காதல் பற்றிய படமும் ஹிட் ஆனது.

டைரக்டர் கஸ்தூரி ராஜா

டைரக்டர் கஸ்தூரி ராஜா

கடைசியாக 2006 ல் இது காதல் வரும் பருவம் என்ற படத்தை இயக்கினார். சோலையம்மா, கும்மி பாட்டு போன்ற படங்களில் பாடல்களையும் எழுதி உள்ளார் கஸ்தூரி ராஜா. டைரக்டர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர் என பல முகங்களைக் கொண்ட கஸ்தூரி ராஜா, 1950 ம் ஆண்டு ஆகஸ்ட் 7 ம் தேதி பிறந்தார். இவரது உண்மையான பெயர் கிருஷ்ணமூர்த்தி.

கஸ்தூரி ராஜா பிறந்தநாள்

கஸ்தூரி ராஜா பிறந்தநாள்

இந்த ஆண்டு கஸ்தூரி ராஜாவிற்கு 70 வயது நிறைவடைந்து 71வது வயது துவங்குகிறது. கஸ்தூரி ராஜாவிற்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள். மூத்த மகன் செல்வன்ராகவன் பெரிய டைரக்ராக உள்ளார். இளைய மகன் தனுஷ் டாப் ஹீரோக்களில் ஒருவராக உள்ளார். இந்நிலையில் கஸ்தூரி ராஜாவின் பிறந்தநாளை குடும்பத்தினர்கள் சிறப்பாக கொண்டாடினார்கள்.

தனியாக வந்த தனுஷ்

தனியாக வந்த தனுஷ்

ஆனால் அப்பாவின் பிறந்தநாளுக்கு தனியாக வந்தார் தனுஷ். ரஜினி மகள் ஐஸ்வரயாவை திருமணம் செய்து கொண்ட பிறகு தனி வீட்டில் வசித்து வரும் தனுஷ், ஐஸ்வர்யாவுடனான பிரிவிற்கு பிறகு தனியாக தான் அந்த வீட்டில் வசித்து வருகிறார்.கஸ்தூரி ராஜாவின் பிறந்தநாள் விழாவில் தனுஷின் மகன் லிங்கா மட்டும் கலந்து கொண்டுள்ளார்.

 ஐஸ்வர்யா வாழ்த்து சொன்னாரா

ஐஸ்வர்யா வாழ்த்து சொன்னாரா

கஸ்தூரி ராஜாவின் பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோக்கள், தனுஷ் தனது மகனுடன் இருக்கும் போட்டோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகி செம டிரெண்டாகி வருகிறது. கஸ்தூரி ராஜாவின் பிறந்தநாளுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வாழ்த்து சொல்லவில்லை என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர். சமீபத்தில் தனுஷ் பிறந்தநாளுக்கு அவர் வாழ்த்து சொல்லவில்லை. அதே சமயம் அதற்கு முன் செல்வராகவன் பிறந்தநாளுக்கு ஐஸ்வர்யா வாழ்த்து சொல்லி இருந்தார். இதனால் கஸ்தூரி ராஜா பிறந்தநாளுக்கு ஐஸ்வர்யா வாழ்த்து சொன்னாரா, இல்லையா என ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X