தனுஷைக் கட்டிப்பிடித்து அழுத கருணாஸ் மனைவி.. அடடே இந்த விஷயம் நல்லா இருக்கே!

சென்னை: கென் கருணாஸ் கதை எழுதி இயக்கி நடித்துள்ள படம் யூத். இந்த படம் வரும் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் புரோமோஷன் வேலைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் பேசிய பாடகியும் கென் கருணாஸின் அம்மாவுமான கிரேஸ், மேடையில் தனுஷை கட்டிப்பிடித்து அழுதார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அவர் பேசுகையில், " அசுரன் படத்தில் கென் நடித்தால் நன்றாக இருக்கும் என்று வெற்றிமாறன் சொன்னதும் கருணாஸ் சரி என்று சொல்லிவிட்டார். ஆனால் நான் சரி என்று சொன்னால் தான் வெற்றி மாறன் கென்னை படப்பிடிப்புக்கு அழைத்துச் செல்வேன் என்று சொல்லிவிட்டார். அதற்கு காரணம் 12ஆம் வகுப்பு முழுத் தேர்வு வருகிறது. படப்பிடிப்புக்கு வந்தால் தேர்வு எழுத முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. இப்படி இருக்கையில் நீங்களும் சரி என்று சொன்னால் தான் நான் படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்துச் செல்வேன் என்று கூறினார். மேலும் இதனால் கென்னிற்கு நல்ல எதிர்காலம் அமையவும் வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

Dhanush Comforts Grace Karunas on Stage Emotional Moment at Youth Audio Launch Goes Viral
Photo Credit:

தனுஷ் : நானும் சரி என்றேன். அசுரன் படத்தின் தனுஷ்க்கு மகனாக நடிக்கிறார். ஒருநாள் வெற்றி மாறனைப் பார்த்து, கென் எப்படி நடிக்கிறான் என்று கேட்டேன். மற்றவர்கள் எல்லாம் கென் நன்றாக நடிப்பதாக கூறுகிறார்கள். ஒரு நடிகன் நன்றாக நடிப்பது பெரிய விஷயமல்ல. மாறக ஒரு கதாபாத்திரத்தை அவரை விட சிறப்பாக வேறு யாராலும் நடிக்க முடியாது என்று கூறும் அளவுக்கு நடிக்க வேண்டும். தனுஷ் கென்னை தனது மகனாக நினைத்து நடித்து வருகிறார். ஆனால் கென் இன்னும் தனுஷை தனது அப்பாவாக நினைத்து நடிக்க ஆரம்பிக்கவில்லை, நான் அதற்காகத்தான் காத்துக் கொண்டு இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

Dhanush Comforts Grace Karunas on Stage Emotional Moment at Youth Audio Launch Goes Viral
Photo Credit:

அழுத கிரேஸ்: தனுஷ் ஒரு யுனிவர்சிட்டி மாதிரி, தனுஷ் உடன் கென் இருந்தால் பல விஷயங்களை கற்றுக் கொள்வான். வேறு எங்கும் சென்று தனியாக கற்றுக் கொள்ள வேண்டும் என்று இல்லை என்றும் வெற்றி மாறன் சொன்னார். இதற்காக தனுஷ் மற்றும் வெற்றிமாறனுக்கு நாங்கள் காலத்திற்கும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கும், அதற்கு தனுஷ் வருவார் என்று நான் நினைக்கவில்லை. கென் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அதைவிட அம்மாவுக்கு ரொம்பவும் பயமாகவும் உள்ளது. இந்த படம் நன்றாக வரும் என்று நம்புகிறேன். இந்த படத்தில் பலரது வாழ்க்கை உள்ளது" என்று பேசி முடித்தார். இவர் பேசியதைப் பார்த்து தனுஷ் கிரேஸை கட்டிப் பிடித்து ஆசுவாசப்படுத்தினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X