எனை நோக்கிப் பாயும் தோட்டா குறித்து நள்ளிரவில் இப்படியொரு ட்வீட் போட்ட நடிகர் தனுஷ்!
Recommended Video
சென்னை: கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள எனை நோக்கிப் பாயும் தோட்டா பல கட்ட போராட்டங்களை தாண்டி ஒரு வழியாக இன்று வெளியாகிறது.
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முன்வந்து, கெளதம் மேனனின் கடன் பிரச்சனைகளை தீர்த்துள்ளார்.
எனை நோக்கிப் பாயும் தோட்டா இன்றைய தினம் ரிலீசாகும் என கெளதம் மேனன் மற்றும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் முன்னதாகவே அறிவித்து டிக்கெட் புக்கிங் எல்லாம் தொடங்கிய நிலையில், நடிகர் தனுஷ் நேற்று வரை அது குறித்து எந்தவொரு ட்வீட்டும் போடாமல் இருந்த நிலையில், நள்ளிரவில் படம் ரிலீஸ் குறித்த ட்வீட்டை போட்டுள்ளார்.

4 ஆண்டுகள்
2016ம் ஆண்டு துவங்கப்பட்ட எனை நோக்கிப் பாயும் தோட்டா 2017ம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், 2019ம் ஆண்டு வரை பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு, பின்னர் கடைசி நேரத்தில் படம் ரிலீசாகாமல் தள்ளிப் போடப்பட்டது. கெளதம் மேனனின் கடன் பிரச்சனைகளால் எனை நோக்கிப் பாயும் தோட்டா உரிய நேரத்தில் ரிலீஸ் ஆகவில்லை.

முதல் முறை
கெளதம் மேனன் நடிகர் சிம்புவை வைத்து விண்ணை தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா என இரு படங்களை இயக்கி வெற்றி கொடுத்தார். அடுத்ததாக நடிகர் தனுஷுடன் முதல் முறையாக இணைந்து எனை நோக்கிப் பாயும் தோட்டாவை உருவாக்க முன்வந்த போது, தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்தனர். மேலும், மறுவார்த்தை பேசாதே, விசிறி போன்ற பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை படத்தின் மீது உண்டாக்கியது.
தனுஷ் ட்வீட்
அசுரன் படத்திற்கு தொடர்ந்து புரமோஷன் செய்து வந்த நடிகர் தனுஷ், எனை நோக்கிப் பாயும் தோட்டா ரிலீஸ் குறித்து கண்டுக்கொள்ளவில்லை என தொடர்ந்து ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவு, தற்போது தான் எனை நோக்கிப் பாயும் தோட்டா நாளை வெளியாகிறது என்ற உறுதியான தகவல் கிடைத்தது என்றும், படம் வெளியாவதில் ரொம்ப மகிழ்ச்சியாகவும், ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது என்பதை காண ஆவலுடன் இருக்கிறேன் எனவும் நடிகர் தனுஷ் ட்வீட் செய்துள்ளார்.
இந்த சிரிப்பை காண
தனுஷின் ட்வீட் வந்த நிலையில், தனுஷ் ரசிகர்கள் ட்விட்டரில் #ENPTFromToday ஹேஷ்டேகை டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். இந்த சிரிப்பை காண 2016 மார்ச் முதல் நவம்பர் 2019 வரை காத்திருக்கிறோம் என தனுஷ் ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.
தனுஷே இப்பத்தான் நம்புறாரு
எனை நோக்கிப் பாயும் தோட்டா படம் பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் கடைசி நேரத்தில் தள்ளிப் போன நிலையில், தற்போது நடிகர் தனுஷே இப்பத்தான் நம்புறாரு படம் கடைசியாக வெளியாகிடுமுன்னு என ஒரு ரசிகர் கிண்டலடித்துள்ளார்.
தியேட்டர்ல கிழி தான்
தலைவா இந்த ஒரு வார்த்தை போதும் நாளைக்கு தியேட்டர்ல கிழி தான் என தனுஷின் நள்ளிரவு ட்வீட்டுக்கு இந்த ரசிகர் சும்மா கிழி ஸ்டைலில் பதிலளித்துள்ளார்.
மாஸ் பண்ணிடலாம்
தலைவா இந்த ஒரு ட்வீட் போதும் நாளைக்கு தியேட்டர்ல மாஸ் பண்ணிடலாம் என மற்றொரு தனுஷ் ரசிகர், மறுவார்த்தை பேசாதே ப்ரமோ வீடியோ போட்டு கமெண்ட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











