எந்த பிரச்னையும் கிடையாது.. உறுதியா வெளியாகிறான் ’கர’சாமி.. தனுஷ் தடாலடி போஸ்ட்

சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாகவுள்ள படம் கர. இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்திற்கான டிக்கெட்டுகள் விற்பனை நடைபெற்று வந்தாலும், ரசிகர்கள் பலரும் மிகவும் கவலையுடன் இருப்பது, கர படத்தின் மீது தொடரப்பட்ட வழக்கு தான். ஏற்கனவே இந்த பெயரை பதிவு செய்துவிட்டதாகவும், எனவே படத்தை வேறு பெயரில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் படம் நாளை அதாவது ஏப்ரல் 30ஆம் தேதி உறுதியாக வெளியாகும் என்று தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Dhanush confirms Kara will release on April 30 despite title controversy and legal issues bringing relief to fans eagerly awaiting the film s theatrical release

இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து உருவாகி உள்ள படம் கர. இந்த படம் வரும் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தில் மமிதா பைஜு, கே.எஸ். ரவிக்குமார், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் புரோமோசன் வேலைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தனுஷ் நம்பிக்கை: அடுத்து வெளியாக உள்ள படம் கர. இந்த படத்தைப் பார்த்த பின்னர் தனுஷ் பெரும் நம்பிக்கையுடன் இயக்குநர் விக்னேஷ் ராஜாவிடம் பகிர்ந்து கொண்ட தகவல்கள் பலரது கவனத்தை ஈர்த்தது. கர படம் மட்டும் பாக்ஸ் ஆபீஸில் பெறும் வெற்றியைப் பெற்றால், தமிழ் சினிமா உலகத்திற்கே பெரும் நம்பிக்கையும் புத்துணர்வும் கிடைக்கும். கதையை மட்டும் நம்பி படம் எடுத்தால் போதும் மக்கள் ஆதரிப்பார்கள், தேவையற்ற வித்தைகள் எல்லாம் செய்ய வேண்டியது இல்லை என்று தெரிவித்திருந்தார். இது பலரது கவனத்தை ஈர்த்தது.

தனுஷ் ட்வீட்: இப்படி இருக்கையில் படத்தின் மீது வழக்கு தொடரப்பட்டதால் படம் வெளியாகுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இப்படி இருக்கையில் படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் ரசிகர்கள் படம் வெளியாகுமா என்ற சந்தேகத்தில் முன் பதிவில் ஆர்வம் காட்டத்ததால், டிக்கெட் விற்பனை படக்குழு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் கர படம் நாளை முதல் அதாவது ஏப்ரல் 30ஆம் தேதியில் இருந்து வெளியாகும் என்று பதிவிட்டுள்ளதால், ரசிகர்கள் ஆர்வமாக புக் செய்து வருகின்றனர்.

Read more about: dhanush tamil nadu kara
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X