கர்ணன் 2 வது ஷெட்யூல் ஓவர்... 90 சதவிகித ஷூட்டிங் முடிந்தது... உறுதிப் படுத்தினார் தனுஷ்!

By

சென்னை: கர்ணன் பட ஷூட்டிங், 90 சதவிகிதம் முடிந்துவிட்டது என்பதை நடிகர் தனுஷ் உறுதிப்படுத்தியுள்ளார்.

Recommended Video

Dhanush Karnan Shooting Spot | Mari Selvaraj | Djhanush 41

மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். கலைப்புலி எஸ்.தாணு, தனது வி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயண் இசை அமைக்கிறார்.

மலையாள நடிகை ரஜிஷா விஜயன், தனுஷ் ஜோடியாக நடிக்கிறார். நடிகர் லால், காமெடி நடிகர் யோகிபாபு, '96' படத்தில் குட்டி ஜானுவாக நடித்த கெளரி கிஷன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

தனுஷின் தோற்றம்

தனுஷின் தோற்றம்

திருநெல்வேலி அருகே பிரமாண்ட செட் அமைத்து இதன் ஷூட்டிங் நடந்து வந்தது. கடந்த மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் உள்ளூர் இளைஞர்களுக்கு இயக்குனர் மாரி செல்வராஜ் ஆடிஷன் நடத்தினார். இதில் தேர்வான இளைஞர்களை முக்கியமான கேரக்டர்களில் நடிக்க வைத்துள்ளார். இந்நிலையில், இந்தப் படத்தில் தனுஷின் தோற்றத்தை நடிகர் லால் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டார்.

கிராமத்துக்காக

கிராமத்துக்காக

அந்தத் தோற்றத்தில் தனுஷ், லாலின் அருகில் அப்பாவியாக நிற்கிறார். யேமன், கர்ணன் என்று கேப்ஷன் கொடுத்திருந்தார், லால். இந்த புகைப்படம் வைரலானது. இதன் கதை மாஞ்சோலை தொழிலாளர்களைப் பற்றியது என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், இல்லை என்று இப்போது கூறப்படுகிறது. இது, ஒரு கிராமத்துக்காகப் போராடும் இளைஞனை பற்றிய கதை என்று கூறப்படுகிறது.

90 சதவிகித ஷூட்டிங்

இதுவரை 90 சதவிகித படப்பிடிப்பை அவர் முடித்துவிட்டார் என்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன் செய்தி வெளியிட்டிருந்தோம். அதை நடிகர் தனுஷ் ட்விட்டரில் உறுதிப்படுத்தி உள்ளார். 'கர்ணன் படத்தின் இரண்டாவது ஷெட்யூல் முடிவடைந்து விட்டது. படத்தின் 90 சதவிகித ஷூட்டிங் முடிந்துவிட்டது' என்று அதில் தெரிவித்துள்ளார்.

வொர்க்கிங் ஸ்டைல்

வொர்க்கிங் ஸ்டைல்

கூடவே குதிரையுடன் நிற்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த ட்வீட் வைரலாகி வருகிறது. இன்னும் 10 நாட்களில் மொத்த படமும் முடிந்துவிடும். இயக்குனர் மாரி செல்வராஜின் வொர்க்கிங் ஸ்டைல் பிடித்துள்ளதால், மீண்டும் அவர் இயக்கத்தில் நடிக்க நடிகர் தனுஷ் விருப்பம் தெரிவித்துள்ளார் என்று சொல்கிறார்கள்.

ஜகமே தந்திரம்

ஜகமே தந்திரம்

நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜகமே தந்திரம் வெளியாக இருக்கிறது. கர்ணனுக்கு பிறகு, கார்த்திக் நரேன் இயக்கும் படம், ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அக்‌ஷய்குமார், சாரா அலிகான் நடிக்கும் அட்ரங்கி ரே ஆகிய படங்களில் தனுஷ் நடித்து வருகிறார். இந்தப் படங்களுக்கு பின் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கலாம் என்று தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X