ரஜினி, கமல், விஜய்யை பின்னுக்குத் தள்ளிய தனுஷ்.. ட்விட்டரில் ஒரு கோடி ஃபாலோயர்களுடன் முதலிடம்!

சென்னை: சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட சாதனைகளை படைத்து வருகிறார் நடிகர் தனுஷ்.

மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் 1 பில்லியன் வியூஸை அள்ளி இமாலய சாதனை படைத்தது.

இந்நிலையில், ட்விட்டரில் இதுவரை கோலிவுட்டின் எந்தவொரு டாப் நடிகரும் எட்டாத அளவுக்கு ஒரு கோடி ஃபாலோயர்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளார் தனுஷ்.

ஒரு கோடி பேர்

ஒரு கோடி பேர்

கோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என கலக்கி வரும் நடிகர் தனுஷ் ட்விட்டரில் படு ஆக்டிவாக இருப்பவர். தென்னிந்திய சினிமா பிரபலங்களிலேயே அதிக அளவு ஃபாலோயர்கள் கொண்ட நடிகர்களுக்கு கடும் போட்டி கொடுத்து வந்த நடிகர் தனுஷ் தற்போது 10 மில்லியன் ஃபாலோயர்களை கடந்துள்ளார்.

முதலிடம்

முதலிடம்

இன்ஸ்டாகிராமில் வெறும் 2.8 மில்லியன் ரசிகர்களை மட்டுமே கொண்டுள்ள நடிகர் தனுஷ் ட்விட்டர் பக்கத்தில் 10 மில்லியன் ஃபாலோயர்களை அள்ளி உள்ளார். நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், ஸ்ருதிஹாசன் என ஏகப்பட்ட பிரபலங்கள் ட்விட்டரில் உள்ள நிலையில், அவர்களை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார் தனுஷ்.

வண்டர்பார் ஹாப்பி

வண்டர்பார் ஹாப்பி

நடிகர் தனுஷ் கோலிவுட் சினிமா பிரபலங்களிலேயே அதிகளவு ரசிகர்களை கொண்டு ட்விட்டரில் முதலிடத்தை பிடித்தது ரொம்ப சந்தோஷமாக இருப்பதாக தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வண்டர்பார் தற்போது ட்வீட் போட்டு நடிகர் தனுஷை டிரெண்ட் செய்து வருகிறது.

ரஜினி ரசிகர்கள்

ரஜினி ரசிகர்கள்

ட்விட்டரில் அதிக அளவு ஆக்டிவாக இல்லாமல், எப்போதாவது ஒரு ட்வீட் போட்டு வைரலாக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ட்விட்டர் பக்கத்தில் 5.9 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். விரைவில் 6 மில்லியனை ரஜினிகாந்த் தொட உள்ளார்.

கமல் ஃபாலோயர்கள்

கமல் ஃபாலோயர்கள்

அடிக்கடி ட்விட்டரில் படு ஆக்டிவாக இருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன், அரசியல் மற்றும் சினிமா சார்ந்த ட்வீட்களை பெருமளவில் தனது ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். 6.8 மில்லியன் ரசிகர்களுடன் கமல் ரஜினிகாந்தை ட்விட்டர் பக்கத்தில் முந்தி உள்ளார். அவரது மகள் ஸ்ருதிஹாசன் 7.8 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டுள்ளார்.

சூர்யாவுக்கும் அதிகம்

சூர்யாவுக்கும் அதிகம்

சினிமா, சமூக கருத்துக்கள் என நடிகர் சூர்யாவும் ட்விட்டரில் படு ஆக்டிவாக தொடர்ந்து தனது கருத்துக்களை ரசிகர்களுடன் ஷேர் செய்து வருகிறார். ட்விட்டரில் அவரை 6.8 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யாவுக்கு அடுத்த இடத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் 6.6 மில்லியன் ரசிகர்களுடன் உள்ளார்.

விஜய்க்கு எவ்ளோ

விஜய்க்கு எவ்ளோ

ஆண்டுக்கு 4 முதல் 5 ட்வீட்கள் மட்டுமே போட்டு வரும் தளபதி விஜய்க்கு 3.2 மில்லியன் ஃபாலோயர்கள் ட்விட்டர் பக்கத்தில் உள்ளனர். தனது படங்கள் வெளியாகும் போது நடிகர் விஜய் அதன் ஃபர்ஸ்ட் லுக், டீசர் என வெளியிடும் போது ஒட்டுமொத்த ரசிகர்களும் அந்த ஒரு ட்வீட்டையே வேற லெவலில் வைரலாக்கி வருகின்றனர்.

அஜித் இல்லை

அஜித் இல்லை

டோலிவுட் நடிகர் மகேஷ் பாபு 11 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ளார். மோகன் லால், சமந்தா எல்லாமே 8 மற்றும் 6 மில்லியன்களுடன் உள்ளனர். நடிகை நயன்தாரா, தல அஜித் உள்ளிட்ட டாப் நடிகர்கள் எந்தவொரு சமூக வலைதளங்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தல அஜித்தின் ஹாஷ்டேக்குகள் தான் சமூக வலைதளத்தில் அதிகளவு டிரெண்டாகி வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X