அப்போ சுள்ளான்.. இப்போ சுருளியா.. இதுதான் தனுஷின் அடுத்த பட டைட்டிலா?
Recommended Video
சென்னை: ரஜினிகாந்தின் பேட்ட படத்தை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், நடிகர் தனுஷை வைத்து இயக்கி வருகிறார்.
'டி-40' என அழைக்கப்பட்டு வரும் அந்த படத்தின் பெயர் 'சுருளி' என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுள்ளான்
"சுள்ளான் சூடானா தாங்கமாட்ட" என வசனம் பேசி நடித்து வந்த நடிகர் தனுஷ், தற்போது நடிப்பில் மிகப்பெரிய அசுரனாக வளர்ந்துள்ளார். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து இடங்களிலும் தனது கொடியை பறக்க விட்டு வருகிறார். நடிகராக வளர்ந்த தனுஷ், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குநர் என சினிமாவில் தனது ஆளுமையை விரிவு படுத்தி வருகிறார்.

டி40
தனுஷின் 40வது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு சுருளி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இன்று வெளியாகியுள்ள ஆக்ஷன் படத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா லக்ஷ்மி தான் தனுஷின் 40வது படத்திலும் நாயகியாம். மேலும் இவர்களுடன் கலையரசன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
மாமனாருடன் போட்டி
தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட தனுஷின் பட்டாஸ் படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், மாமனார், மருமகன் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவழியாக
நீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கும் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா ஒருவழியாக இம்மாத இறுதியில் நவம்பர் 29ம் தேதி வெளியாகும் என இயக்குநர் கெளதம் மேனன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்தடுத்த ரிலீசுக்கு நடிகர் தனுஷ் ரெடியாகி வருகிறார்.


Click it and Unblock the Notifications











