Dhanush D 50: விரைவில் D 50 ஃபர்ஸ்ட் லுக்... தனுஷின் மிரட்டல் போஸ்டருடன் வெளியான அப்டேட்!
சென்னை: தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் டிசம்பர் 15ம் தேதி வெளியாகிறது.
கேப்டன் மில்லரை தொடர்ந்து தனுஷ் தனது 50வது படத்தில் நடித்து வருகிறார்.

D 50 என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தை தனுஷ் இயக்குவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், D 50 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என இயக்குநர் சுப்ரமணிய சிவா அப்டேட் கொடுத்துள்ளார்.
விரைவில் D 50 ஃபர்ஸ்ட் லுக்
தனுஷின் லைன்அப்பில் அடுத்தடுத்து 4 படங்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன. கேப்டன் மில்லர் படத்தை முடித்துவிட்ட தனுஷ், தற்போது D 50 ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர், இந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கும் Tere Ishk Mein படங்களில் தனுஷின் போர்ஷன் முழுவதுமாக முடிந்துவிட்டது. இதனையடுத்தே தனது 50 படத்தின் வேலைகளை தொடங்கினார் தனுஷ்.
பவர் பாண்டிக்குப் பிறகு தனுஷ் இயக்கும் இரண்டாவது படம் D 50 என்பதும் குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் D 50 படத்தின் ஷூட்டிங் ஜூலை மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. D 50 படப்பிடிப்பை குறுகிய நாட்களில் முடித்துவிட தனுஷ் பிளான் செய்துள்ளாராம். அதன்படி, தற்போது D 50 ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

D 50 படத்தில் தனுஷுடன் எஸ்ஜே சூர்யா, விஷ்ணு விஷால், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், நித்யா மேனன் ஆகியோர் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும், இதுபற்றி படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.
சில நாட்கள் முன்னதாக D 50 படப்பிடிப்புத் தளத்தில் தனுஷ் மொட்டை தலையுடன் இருக்கும் போட்டோ வெளியாகி வைரலானது. அதனால் D 50 படத்தில் தனுஷின் லுக் மொட்டை தலையுடன் தான் இருக்கும் என ரசிகர்கள் கூறி வந்தனர். அது தற்போது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. தனுஷின் ஆரம்ப காலத்தில் 'திருடா திருடி' திரைப்படம் மூலம் பெரிய ஹிட் கொடுத்தவர் இயக்குநர் சுப்ரமணிய சிவா. அவர் தற்போது D 50 அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
அதன்படி தனுஷின் D 50 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், தனுஷின் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்துள்ளார். D 50 பட பூஜையின் போது எடுக்கப்பட்ட தனுஷின் போட்டோவுடன், அவரது மேலும் இரண்டு புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளார். இந்த மூன்று புகைப்படங்களிலும் தனுஷின் முகம் தெரியாதபடி எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











