Dhanush: ரஜினி, சிவகார்த்திகேயன் வரிசையில் தனுஷின் அடுத்த டார்கெட்... D 50 ரிலீஸ் தேதி இது தானா?

சென்னை: தனுஷ் இயக்கி நடித்துள்ள D 50 படத்தின் ஷூட்டிங் சில தினங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை தனுஷ் கன்ஃபார்ம் செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனுஷின் அடுத்த டார்க்கெட்: கோலிவுட்டின் இளம் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான தனுஷ், அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகியுள்ளார். இதனிடையே தனது 50வது படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். ஏற்கனவே பவர் பாண்டி திரைப்படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தவர் தனுஷ். ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. இதனால் இயக்குநராகவும் வெற்றிப் பெற்றார் தனுஷ்.

 Dhanush D 50: Dhanushs D 50 planning for April release on Tamil New Year or EID

இதனையடுத்து தற்போது தனது 50வது படத்தை இயக்கியுள்ளார் தனுஷ். D 50 என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் தனுஷே ஹீரோவாக நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. பவர் பாண்டி ஃபீல் குட் மூவியாக வெளியான நிலையில், D 50 பக்கா ஆக்‌ஷன் ஜானரில் இருக்கும் என சொல்லப்படுகிறது. வட சென்னையை பின்னணியாக வைத்து கேங்ஸ்டர் மூவியாக உருவாகியுள்ளதாம் D 50.

தனுஷுடன் எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு, ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் D 50 படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தனுஷ் அப்டேட் கொடுத்திருந்தார். மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் நன்றி கூறியிருந்தார். இதன் தொடர்ச்சியாக D 50 ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் செய்துவிட்டாராம் தனுஷ்.

அதன்படி இந்தப் படம் அடுத்தாண்டு தமிழ் புத்தாண்டு அல்லது ரம்ஜானை முன்னிட்டு ஏப்ரல் 11 அல்லது 12ம் தேதி ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை முடித்துவிட்டு, ரிலீஸ் தேதி அப்டேட்டை வெளியிட உள்ளாராம் தனுஷ். அதேநேரம் தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக கமலின் இந்தியன் 2, சூர்யாவின் கங்குவா படங்களும் அதே நாளில் வெளியாகிறதாம். இதனால் தமிழ்ப் புத்தாண்டு ரேஸில் கமல், சூர்யா, தனுஷ் என பலமான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் பொங்கல் வெளியீடாக தனுஷின் கேப்டன் மில்லர் வெளியாகிறது. அதே பொங்கல் ஸ்பெஷலாக ரஜினியின் லால் சலாம், சிவகார்த்திகேயனின் அயலான் படங்களும் வெளியாகின. இதில் தனுஷின் கேப்டன் மில்லர் டிசம்பர் 15ம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால், ரஜினியின் லால் சலாம், சிவகார்த்திகேயனின் அயலான் படங்களும் பொங்கலுக்கு வெளியாகின்றன. அதேபோல் கமலின் இந்தியன் 2, சூர்யாவின் கங்குவா படங்களுடன் D 50 மோதவிருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X