Dhanush D 50: தள்ளிப்போகும் தனுஷின் D50 ரிலீஸ்... இதெல்லாம் ஒரு காரணமா..? ரசிகர்கள் சோகம்!

சென்னை: தனுஷ் தற்போது தனது 51வது படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக காணப்படுகிறார். முன்னதாக தனுஷ் இயக்கி நடித்துள்ள D50 திரைப்படம் ஏப்ரல் 11ம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது D 50 ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான காரணம் பற்றியும் தகவல்கள் கிடைத்துள்ளன.

தள்ளிப்போகும் தனுஷின் D 50 ரிலீஸ்
தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் கேப்டன் மில்லர் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் பற்றி படக்குழுவினர் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தனது 51வது படத்தில் பிஸியாகிவிட்டார் தனுஷ். முன்னதாக தனுஷின் D 50 படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

 Dhanush D 50: Dhanushs D50 release is getting delayed due to the elections

வடசென்னையை பின்னணியாக வைத்து கேங்ஸ்டர் ஜானரில் உருவாகியுள்ள D 50 படத்தில் தனுஷுடன் எஸ்ஜே சூர்யா, நித்யா மேனன், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தனுஷ் இயக்கியுள்ள இரண்டாவது படமாக D 50 உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

D 50 படப்பிடிப்பு முழுவதும் ரொம்பவே சைலண்டாக நடந்து முடிந்துள்ளது. இந்தப் படம் பற்றிய ஒரு அப்டேட் கூட இதுவரை அபிஸியலாக வெளியாகவில்லை. இந்நிலையில் D 50 படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் படக்குழு பிஸியாகியுள்ளது. இன்னொரு பக்கம் தனுஷோ தனது 51வது படத்தின் படப்பிடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்.

D 50 ஷூட்டிங் முடிந்துவிட்டதால் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை நிறைவு செய்துவிட்டு ஏப்ரலில் படத்தை ரிலீஸ் செய்ய தனுஷ் முடிவு செய்திருந்தார். அதன்படி D 50 ஏப்ரல் 11ம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல், மே மாதங்களில் 2024ம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் மக்களின் கவனம் முழுவதும் தேர்தலை நோக்கி தான் இருக்கும்.

இதன் காரணமாக D 50 படத்தின் ரிலீஸை தள்ளி வைக்க தனுஷ் முடிவு செய்துள்ளாராம். தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே D50 ரிலீஸ் குறித்து முடிவு செய்யலாம் என படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இதனால் ஏப்ரல் மாதம் D 50 வெளியாகும் என எதிர்பார்த்திருந்த தனுஷ் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். அதேநேரம் D 50 மட்டும் இல்லாமல் தமிழில் பல பெரிய பட்ஜெட் படங்களும் ஏப்ரல் ரிலீஸில் இருந்து பின்வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X