காத்திருந்தது வீண் போகல.. தனுஷின் டி40 அப்டேட் வந்துடுச்சு.. அந்த டைட்டிலா இருக்குமா?

Recommended Video

Dhanush Karnan Shooting Spot | Mari Selvaraj | Djhanush 41

சென்னை: தனுஷின் டி40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ரிலீஸ் ஆகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, சஞ்சனா நடராஜன் நடிப்பில் உருவாகி உள்ள டி40 படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

காலை முதலே தனுஷ் ரசிகர்கள், #D40FirstLookUpdate ஹாஷ்டேக்கை உருவாக்கி இந்த அப்டேட்டுக்காகத் தான் காத்திருந்தனர்.

மாஸ் அப்டேட்

தற்போது, அந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. வரும் பிப்ரவரி 19ம் தேதி டி40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாக உள்ளது. படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டிலையும் படக்குழு அதே நாளில் தான் ஃபர்ஸ்ட் லுக்குடன் அறிவிக்கப் போகிறது. அப்டேட் கிடைத்த சந்தோஷத்தில் ஹாஷ்டேக்கை மேலும், டிரெண்ட் செய்து வருகின்றனர் தனுஷ் ரசிகர்கள்.

என்ன டைட்டில்?

என்ன டைட்டில்?

பேட்ட படத்திற்கு பிறகு தனுஷின் 40வது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இந்த படத்தில் சுருளி எனும் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். படத்திற்கும் அதே டைட்டில் தான் இருக்கும் என செய்திகள் வெளியாகின. ஆனால், படக்குழு அதனை மறுத்துள்ளது.

ஜிகர்தண்டா டைட்டில்

ஜிகர்தண்டா டைட்டில்

இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, விஜய்சேதுபதி, லட்சுமி மேனன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஜிகர்தண்டா படத்திற்கு, கார்த்திக் சுப்புராஜ் முன்னதாக யோசித்து வைத்திருந்த மாஸ் டைட்டில் தான் வைக்கப் பட போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இன்னும் பத்து நாள்

தனுஷின் 40வது படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டருக்காக தனுஷ் ரசிகர்கள் இன்னும் பத்து நாட்கள் காத்திருக்க வேண்டும். ஆனால், கண்டிப்பாக அந்த வெயிட்டிங் செம்ம வொர்த்தாக இருக்கும் என ரசிகர்கள், தங்களுக்குள்ளே ஆறுதல்களை ட்வீட் போட்டு பரிமாறிக் கொள்கின்றனர்.

விஜய் ரசிகர்கள் வாழ்த்து

விஜய் ரசிகர்கள் வாழ்த்து

தனுஷ் ரசிகர்களுக்கு எப்போதும் விஜய் ரசிகர்கள் ஆதரவாக இருந்து வருகின்றனர். அதே போல விஜய் ரசிகர்களுக்கு தனுஷ் ரசிகர்கள் அன்பு கரம் நீட்டுகின்றனர். இந்நிலையில், காலையில் இருந்து ஹாஷ்டேக் டிரெண்டாக தனுஷ் ரசிகர்களுக்கு உதவியாக இருந்து வந்த விஜய் ரசிகர்கள், அப்டேட்டுக்கு தாங்களும் வெயிட்டிங் என வாழ்த்தி வருகின்றனர்.

இதுதான் டைட்டிலா?

பொல்லாதவன், ஆடுகளம், மாரி, வடசென்னை, அசுரன் என பல கேங்ஸ்டர் படங்களில் நடித்துள்ள நடிகர் தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெறித்தனமான கேங்ஸ்டர் படமாக டி40 படத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், இந்த படத்திற்கு சுருளி அல்ல சம்பவம் தான் டைட்டில் என்றும் ரசிகர்கள் தங்களது கணிப்புகளை பரிமாறி வருகின்றனர்.

இதுக்கா இம்புட்டு நேரம்

பிப்ரவரி 19ம் தேதி தான் தனுஷ் டி40 படத்தின் அறிவிப்பு வரப் போகிறது. இதை சொல்லவா இம்புட்டு நேரம் இழுக்குற என தனுஷ் ஹேட்டர்கள், மீம்களை போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். இப்போதெல்லாம் இப்படி ஒவ்வொரு அப்டேட்டுக்கும் பில்டப் கொடுத்தாத்தான் படம் பிசினஸ் ஆகுதுன்னும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X