சுருளியும் இல்லை.. சம்பவமும் இல்லை.. ஜிகிர்தண்டாவை தொடர்ந்து ஜாக்பாட் அடிக்கப்போகும் ஜகமே தந்திரம்!

சென்னை: தனுஷின் 40வது படத்திற்கு ஜகமே தந்திரம் என செம மாஸான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

அருவாளுடன் போஸ்டர் வரும் என எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு, வேட்டி சட்டையில், நடிகர் தனுஷ், கைகளில் துப்பாக்கிகளை ஏந்தி ரியல் கேங்ஸ்டராக காட்சி தருகிறார்.

Dhanush D40 movie titled Jagame Thanthiram

ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தனுஷ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சஞ்சனா நடராஜன், வாக்ஸல் ஜெர்மைன் மற்றும் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Dhanush D40 movie titled Jagame Thanthiram

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்த படத்திற்கு வைக்கப்பட்டுள்ள அட்டகாசமான டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை பார்த்த தனுஷ், ரசிகர்கள், அப்பாடா இவ்ளோ நாள் வெயிட் பண்ணதுக்கு வொர்த்தாக இருக்கிறது என #D40FirstLook மற்றும் #D40MotionPoster ஹாஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Dhanush D40 movie titled Jagame Thanthiram

தனுஷ் இரு வேடங்களில் இந்த படத்தில் நடித்து வருவதாகவும், லண்டன் மற்றும், மதுரையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று உள்ளதாகவும் தகவல்களும், ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் கசிந்து வைரலாகின.

மேலும், பேட்ட படத்தில் பேட்ட வேலன் கெட்டப்பில் ரஜினிகாந்த், கெடா மீசை வைத்து நடித்திருந்தது போல, சுருளி எனும் கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ளார்.

புதுப்பேட்டை, மாரி, மாரி 2, வடசென்னை உள்ளிட்ட படங்களை தொடர்ந்து மீண்டும் ஒரு கேங்ஸ்டர் படமாக இந்த படம் உருவாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X