மீண்டும் ஒரு யாராடி நீ மோகினி வருமா.. 4வது முறையாக அந்த இயக்குநருடன் கூட்டணி வைக்க தனுஷ் முடிவு?

சென்னை: இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் மீண்டும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன், குட்டி படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் 4வது முறையாக தனுஷின் புதிய படத்தை இயக்கவுள்ளார்.

பொங்கலுக்கு தனுஷின் பட்டாஸ் படம் வெளியாகவுள்ள நிலையில், அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் டி40 படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.

அதற்கு அடுத்து 3 படங்களில் ஒப்பந்தமாகியுள்ள நடிகர் தனுஷ் டி44 படத்தில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.

யாராடி நீ மோகினி

யாராடி நீ மோகினி

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நயன்தாரா, ரகுவரன் நடிப்பில் வெளியான யாராடி நீ மோகினி படம் நடிகர் தனுஷுக்கு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. தெலுங்கில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 'ஆடவாரி மாட்டலாக்கு அர்த்தலே வேருலே' என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் யாராடி நீ மோகினி. செல்வராகவனின் உதவி இயக்குநரான மித்ரன் ஜவஹர் தமிழில் அந்த படத்தை இயக்கி அறிமுகமானார்.

டி40

டி40

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் பட்டாஸ் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. அந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் டி40 படமும் திரைக்கு வரவிருக்கிறது. மதுரையில் அதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பேட்ட படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து வரும் அந்த படத்தில் தனுஷின் கதாபாத்திரத்தின் பெயர் சுருளி என்ற தகவல் கசிந்துள்ளது. படத்தின் டைட்டிலும் அதுதான் என்றும் வதந்திகள் பரவி வருகின்றன.

மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ்

டி40 படத்தை தொடர்ந்து பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் வித்தியாசமான கதையம்சம் கொண்ட புதிய படத்தில் நடிக்கவுள்ளார். பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றியை தொடர்ந்து, மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணி உருவாகவுள்ளது.

ராட்சசன்

ராட்சசன்

மாரி செல்வராஜ் படத்தை தொடர்ந்து ராட்சசன் இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்திலும் நடிகர் தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ராட்சசன் படத்திற்கு பிறகு வெயிட்டான கதையை தனுஷுக்காக உருவாக்கிய ராம் குமார், அவரது கால்ஷீட்டுக்காக வெயிட் செய்து வருகிறார்.

மீண்டும் வெற்றிமாறன்

மீண்டும் வெற்றிமாறன்

வடசென்னை, அசுரன் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கவுள்ள இயக்குநர் வெற்றிமாறன் அந்த படத்தை முடித்த கையோடு தனுஷுடன் இணைவார் என கூறப்படுகிறது.

டி44

டி44

இந்த 4 படங்களுக்குப் பிறகு தனுஷ் - மித்ரன் ஜவஹர் இணையும் டி44 படம் உருவாகும் என்ற பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன், குட்டி படங்களை தொடர்ந்து 4வது முறை இந்த கூட்டணி உருவானால், நிச்சயம் காமெடி சரவெடி படம் ஒன்று தனுஷ் லிஸ்டில் கன்ஃபார்ம். இதில் ஸ்பெஷல் என்னவென்றால் இந்த படத்தின் கதையை நடிகர் தனுஷே எழுதியுள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X