Dhanush: ‘ராட்சசன்’ ராம்குமார் கூட்டணியில் இருந்து விலகிய தனுஷ்..? வாய்ப்பை தட்டித் தூக்கிய ஹீரோ!

சென்னை: தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் தனது 51வது படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ஹெச் வினோத், செல்வராகவன் படங்களில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனிடையே ராட்சசன் இயக்குநர் ராம்குமாருடன் தனுஷ் இணையவிருந்த படம் ட்ராப் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ட்ராப் ஆனது தனுஷின் புதிய படம்
தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் கடந்த மாதம் பொங்கலுக்கு வெளியானது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கேப்டன் மில்லர் எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தனது அடுத்தப் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ்.

 Dhanush: Dhanush New Project Dropped directed by Ratchasan Ramkumar

அதன்படி தனுஷின் 51வது படத்தை சேகர் கம்முலா இயக்கி வருகிறார். தனுஷுடன் ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது கோவாவில் நடைபெற்றது. தனுஷின் டி 51 இந்தாண்டு இறுதிக்குள் ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தனுஷ் இயக்கி நடித்துள்ள அவரது 50வது படமும் இந்தாண்டு வெளியாகவுள்ளது.

இதன் தொடர்ச்சியாக ஹெச் வினோத், செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க தனுஷ் ரெடியாகிவிட்டார். அதேபோல் இயக்குநர் ராம்குமாருடனும் கூட்டணி வைக்கவிருந்தார் தனுஷ். முண்டாசுப்பட்டி, ராட்சசன் படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் ராம்குமார். இந்தப் படங்களைப் பார்த்து இம்ப்ரஸ் ஆன தனுஷ், ராம்குமார் இயக்கத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்தார். இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கவிருந்தது.

ஆனால், தற்போது ராம்குமார் கூட்டணியில் இருந்து தனுஷ் விலகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றிய காரணங்கள் தெரியவில்லை என்றாலும், தனுஷுக்குப் பதிலாக விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிப்பது மட்டும் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. அதன்படி விஷ்ணு விஷாலுக்காக கதையில் சில மாற்றங்கள் செய்துள்ள ராம்குமார், படப்பிடிப்பை கொடைக்கானல் பகுதியில் நடத்தி வருகிறாராம். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தான் இந்தப் படத்தையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது லால் சலாம் படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. விஷ்ணு விஷாலுக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்த படங்கள் என்றால் அது முண்டாசுப்பட்டியும் ராட்சசனும் தான். அதே இயக்குநருடன் விஷ்ணு விஷால் மீண்டும் இணைந்துள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்தப் படமும் சூப்பர் ஹிட் அடிக்கும் என சினிமா விமர்சகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், தனுஷ் பொதுவாக ஏற்கனவே கமிட்டான படங்களில் இருந்து விலக மாட்டார். ஆனால் ராம்குமார் படத்துக்காக கால்ஷீட் கொடுத்த பின்னர் தனுஷ் விலகியிருப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தனுஷ் இயக்கி நடித்துள்ள டி 50 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X