Dhanush: ”இது சம்பவம் பண்ற கை... அருண் மாதேஸ்வரன் இன்னொரு வெற்றிமாறன்..” தனுஷ் ஓபன் ஸ்டேட்மெண்ட்
சென்னை: தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது. இதனையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தனுஷ், இயக்குநர் அருண் மாதேஸ்வரன், வெற்றிமாறனை நியாபகப்படுத்துவதாக புகழ்ந்து பேசியது வைரலாகி வருகிறது.
அருண் மாதேஸ்வரன் இன்னொரு வெற்றிமாறன்
தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். ராக்கி, சாணி காயிதம் படங்கள் மூலம் பிரபலமானவர் அருண் மாதேஸ்வரன். இந்த இரண்டு படங்களுமே ரத்தம் தெறிக்க தெறிக்க அதிக வன்முறை காட்சிகளுடன் உருவாகியிருந்தது. அதேபோல் தான் தனுஷின் கேப்டன் மில்லரும் ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ளது. இது அருண் மாதேஸ்வரனின் மூன்றாவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கேப்டன் மில்லர் திரைப்படம் வரும் 12ம் தேதி வெளியாகவுள்ளதை முன்னிட்டு, ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தனுஷ், ப்ரியங்கா மோகன், சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், இயக்குநர் அருண் மாதேஸ்வரன், ஜிவி பிரகாஷ் குமார் உட்பட கேப்டன் மில்லர் படக்குழுவினர் கலந்துகொண்டனர். ஆயிரக்கணக்கான ரசிகர்களும் இந்நிகழ்ச்சியை காண திரண்டு வந்திருந்தனர்.
அப்போது பேசிய தனுஷ், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் குறித்து புகழ்ந்து பேசியிருந்தார். "அருண் மாதேஸ்வரன பாக்குறப்போ எனக்கு வெற்றிமாறன் தான் நியாபகத்தில் வருகிறார். அருணை முதல் தடவை பார்த்தப்போ, இந்த தம்பியா, சரி ஓகேன்னு தான் படத்தோட ஒன்லைன் கேட்டேன். ஒரு 15 நிமிஷம் சொன்னாரு, பெரிய ஸ்கேல் பட்ஜெட் படமா இருக்குதே, பண்ணிட முடியாமுன்னு கேட்டேன். எல்லாத்துக்கும் பண்ணிடலாம், பண்ணிடலாம்னு சொன்னார்."
"இப்ப நான் கேப்டன் மில்லர் படத்த முழுசா பாத்தேன்... அவரு சொன்ன மாதிரிதான் இருக்கு... அப்புறம் தான் இது சம்பவம் பண்ற கைனு தெரிஞ்சுது.." என பயங்கரமாக புகழ்ந்துள்ளார் தனுஷ். அதுமட்டும் இல்லாமல் விரைவில் மீண்டும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் தனுஷ் கூறியது ரசிகர்களுக்கும் சர்ப்ரைஸ்ஸாக அமைந்தது. தனுஷ் - அருண் மாதேஸ்வரன் கூட்டணி மீண்டும் இணைவது பற்றி ஏற்கனவே அறிவிப்பு வெளியாகிவிட்டது.
இருப்பினும் இதுபற்றி தனுஷ் கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழாவில் பேசியது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக கேப்டன் மில்லர் நீண்ட நாட்களுக்குப் பின்னர் தனுஷ் ரசிகர்களுக்கு தரமான ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











