Dhanush: ‘ராயன்’ லுக்கில் மிரட்டும் தனுஷ்... D 50 டைட்டில் போஸ்டரா இது!! சம்பவத்துக்கு ரெடியா..?

சென்னை: கேப்டன் மில்லரில் நடித்து முடித்துவிட்ட தனுஷ், தற்போது தனது 50வது படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை, தனுஷ் இயக்குவதோடு, அவரே ஹீரோவாகவும் நடிக்கிறார்.

D 50 ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டைட்டில், தனுஷ் லுக் குறித்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது தனுஷின் D 50 டைட்டில் போஸ்டர், தனுஷின் லுக் வெளியாகி வைரலாகி வருகிறது.

 Dhanush: Dhanushs D 50 fanmade poster is trending on Social Media

ராயன் லுக்கில் மிரட்டும் தனுஷ்: கேப்டன் மில்லர் படத்தை முடித்துவிட்ட தனுஷ், தற்போது D 50 ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர், இந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கும் Tere Ishk Mein படங்களில் ஒரேநேரத்தில் நடித்து வந்தார் தனுஷ். இதனைத் தொடர்ந்து தனது 50 படத்தின் வேலைகளில் பிஸியாகிவிட்டார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தற்போதைக்கு D 50 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் ஷூட்டிங் ஜூலை மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. D 50 படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிப்பதோடு, எஸ்ஜே சூர்யா, விஷ்ணு விஷால், சுந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், நித்யா மேனன் ஆகியோர் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல், இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் D 50 படம் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

விரைவில் D 50 அப்டேட்கள் அனைத்தும் அபிஸியலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், இன்னும் ஓரிரு மாதங்களில் மொத்த போஸ்ட் புரொடக்‌ஷன் உட்பட அனைத்தும் முடிந்துவிடும் எனத் தெரிகிறது. இதனால், 2024 தொடக்கத்தில் அல்லது சம்மர் விடுமுறையில் D 50 படத்தை வெளியிட தனுஷ் முடிவு செய்துள்ளாராம்.

 Dhanush: Dhanushs D 50 fanmade poster is trending on Social Media

இதனிடையே, D 50 படத்தின் டைட்டில் 'ராயன்' என இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடசென்னையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் D 50, கேங்ஸ்டர் ஜானரில் இருக்கும் எனவும், அதனால், ராயன் என்ற டைட்டிலை தனுஷ் கன்ஃபார்ம் செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டர், தனுஷ் லுக்குடன் வெளியாகியுள்ளது. மொட்டை தலையுடன் தனுஷ் மிரட்டலாக இருக்க, போஸ்டரில் 'ராயன்' என்ற டைட்டில் உள்ளது.

ஹாலிவுட் பட ரேஞ்சில் செம்ம மிரட்டலாக இருக்கும் D 50 டைட்டில் போஸ்டரை தனுஷ் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஆனால், இது படக்குழு வெளியிட்ட அபிஸியல் போஸ்டர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஃபேன்மேட் போஸ்டரான இது, ஒரிஜினலுக்கே டஃப் கொடுக்கும் வகையில் உருவாகியுள்ளது. ஆனாலும், தனுஷ் ரசிகர்கள் இந்த போஸ்டரை தொடர்ந்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X