Dhanush: இறுதிக்கட்ட பரபரப்பில் D 50... தனுஷின் அடுத்த பிளான் இதுதானா..? செம்ம மாஸ்!!
சென்னை: தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் டிசம்பரில் இருந்து பொங்கல் ரிலீஸுக்கு சென்றுவிட்டது.
கேப்டன் மில்லரில் தனது வேலைகளை முடித்துவிட்ட தனுஷ், அடுத்ததாக தான் இயக்கி நடிக்கும் டி 50 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படம், கேங்ஸ்டர் ஜானரில் உருவாகி வருகிறதாம்.
இந்நிலையில் டி 50 படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக தரமான அப்டேட் கிடைத்துள்ளது.
தனுஷின் அடுத்த பிளான்
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், ரொம்பவே பிஸியாக காணப்படுகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் பொங்கல் தினத்தில் வெளியாகிறது. பீரியட் ஜானரில் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள கேப்டன் மில்லர், தனுஷ் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேப்டன் மில்லரை முடித்துவிட்ட தனுஷ், இன்னொரு பக்கம் தனது 50வது படத்தில் பிஸியாக இருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை தனுஷ் இயக்கி அவரே ஹீரோவாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. தனுஷுடன் எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சுந்தீப் கிஷன், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைப்பதாக சொல்லப்படுகிறது.
வடசென்னையை பின்னணியாக வைத்து கேங்ஸ்டர் ஜானரில் டி 50 படத்தை இயக்குகிறார் தனுஷ். இதற்காக தனது கெட்டப்பை மற்றி மொட்டை தலையுடன் மிரட்டலாக வலம் வந்தார். இந்நிலையில், டி 50 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறதாம். சென்னையில் நடைபெறும் டி 50 ஷூட்டிங் இந்த மாதம் இறுதிக்குள் முடியும் என சொல்லப்படுகிறது.
இறுதியாக தனுஷ் - காளிதாஸ் ஜெயராம் இருவருக்கும் இடையேயான காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. இதனையடுத்து டி 50 படத்தின் ரிலீஸ் தேதி பற்றி சன் பிக்சர்ஸ் பிளான் செய்துள்ளனர். அதன்படி தனுஷின் டி 50 அடுத்தாண்டு சம்மர் ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் டி 50 ஷூட்டிங் முடிந்ததும் உடனடியாக பாலிவுட் செல்கிறார் தனுஷ். மூன்றாவது முறையாக இயக்குநர் ஆனந்த் எல் ராய்யுடன் இணைந்துள்ள தனுஷ் இந்தியில் தேரே இஷ்க் மே என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் தனுஷ், ஆனந்த் எல் ராய் மட்டுமின்றி ஏஆர் ரஹ்மானும் மூன்றாவது முறையாக இணைவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











