Dhanush: கேங்ஸ்டர் டூ மாஃபியா... தனுஷின் அடுத்த அவதாரம் செம்ம மாஸ்... பரபரக்கும் D 51 அப்டேட்!

சென்னை: தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் அடுத்த மாதம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகிறது. இந்நிலையில், தனுஷின் 51வது படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

dhanush-dhanushs-d51-film-will-be-made-in-the-mafia-genre

தனுஷின் அடுத்த அவதாரம்
தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. தனுஷுடன் சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், ப்ரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் பீரியட் ஜானரில் மிரட்டலாக உருவாகியுள்ளது.

இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகள் விரைவில் தொடங்கவுள்ளதாம். அதேபோல், தனுஷின் 50 பட ஷூட்டிங்கும் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனுஷின் D 50 படத்தை அவரே இயக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தனது 51வது படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு உட்பட மொத்தம் 3 மொழிகளில் இப்படம் உருவாகவுள்ளதாம். இதில் தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும், முக்கியமான ரோலில் நாகர்ஜுனாவும் நடிக்கவுள்ளனர். தனுஷின் 50 பட ஷூட்டிங் முடிந்துவிட்டதால், D 51 படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவுள்ளதாம்.

தனுஷின் D 51 மாஃபியா ஜானரில் ஆக்‌ஷன் படமாக உருவாகவுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. D 50 திரைப்படம் கேங்ஸ்டர் ஜானரில் உருவாகவுள்ள நிலையில், D 51-ல் மாபியாவாக மிரட்ட காத்திருக்கிறாம் தனுஷ். முக்கியமாக இந்தப் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஏஆர் ரஹ்மான் தான் D 51 பட இசையமைப்பாளர் என சொல்லப்பட்டது.

ஆனால், D 50 படத்திற்கு தான் ஏஆர் ரஹ்மான் இசை எனவும், D 51ல் தேவிஸ்ரீ பிரசாத் கமிட்டாகியுள்ளதாகவும் தெரிகிறது. பொங்கலுக்குப் பிறகு D 51 ஷூட்டிங் தொடங்கும் எனவும், அப்போது இந்தப் படம் பற்றிய அபிஸியல் அப்டேட் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X