Dhanush: விடாத அரசியல் ஆசை... முதன்முறையாக ரிஸ்க் எடுக்கும் தனுஷ்... D 51 ஷூட்டிங்கில் சர்ப்ரைஸ்!

சென்னை: தனுஷின் 51வது படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கவுள்ளார். தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்தப் படத்தின் கதை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியல் ஆசையில் தனுஷ்: தனுஷ் தற்போது அவர் இயக்கி வரும் டி 50 படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் பிஸியாக காணப்படுகிறார். முன்னதாக அவர் நடித்துள்ள 'கேப்டன் மில்லர்' அடுத்த மாதம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், ப்ரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 Dhanush: Dhanushs D51 Said To Be A Political Mafia Film Based On Real Events Happened In The 70s

கேப்டன் மில்லர் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், தனுஷின் டி 50 படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்தப் படத்தில் தனுஷுடன் எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து D 51 படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். சேகர் கம்முலா இயக்கவுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு உட்பட மொத்தம் 3 மொழிகளில் உருவாகவுள்ளது.

இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கியமான கேரக்டரில் நாகர்ஜுனா கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் தனுஷின் D 51 படத்தின் கதை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தப் படம் பொலிட்டிக்கல் ப்ளஸ் கேங்ஸ்டர் ஜானரில் பீரியட் படமாக உருவாகவுள்ளதாம். 1970களில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து D 51 கதையை எழுதியுள்ளாராம் சேகர் கம்முலா.

தனுஷின் கேங்ஸ்டர் கேரக்டர் ரொம்பவே பவர்ஃபுல்லாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சில காட்சிகள் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஷூட் செய்ய உள்ளார்களாம். அதேபோல், இந்தப் படத்தின் ஷூட்டிங் ஜனவரி மாதம் தொடங்கவுள்ளதாகவும் அதில் தனுஷ் கலந்துகொள்ளவில்லை எனவும் சொல்லப்படுகிறது. தனது 50வது படத்தின் வேலைகளை முடித்துவிட்ட பின்னர் தான் சேகர் கம்முலாவுடன் இணைகிறாராம் தனுஷ்.

அதேநேரம் D51 படத்திற்கு AR ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது தேவி ஸ்ரீபிரசாத் கமிட்டாகியுள்ளதாக தெரிகிறது. பொங்கலுக்குப் பிறகு D 51 ஷூட்டிங் தொடங்கும் எனவும், அப்போது இந்தப் படம் பற்றிய அபிஸியல் அப்டேட் வெளியாகும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X