Dhanush: D50 படப்பிடிப்பில் வைப் கொடுத்த தனுஷ்... இதுதான் அந்த கேங்ஸ்டர் லுக்கா? வெளியான போட்டோ

து படத்தை தனுஷே இயக்கி நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்திற்கு தற்காலிகமாக D50 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், D50 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தனுஷின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

 Dhanush: Dhanushs photo leaked from the D50 shooting spot

D 50 படப்பிடிப்பில் வைப் கொடுத்த தனுஷ்

கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வந்த தனுஷ், தற்போது D50 ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார். அருண் மாதேஸ்வரனின் கேப்டன் மில்லர், இந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கும் Tere Ishk Mein ஆகிய படங்களில் மாறி மாறி நடித்து வந்தார். இந்த இரண்டு படங்களுமே கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதால், தனது 50வது படத்தை தொடங்கினார் தனுஷ்.

தனுஷின் 50வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கடந்த வாரம் D50 ஷூட்டிங் தொடங்கியதாக அறிவித்த படக்குழு, மிரட்டலான போஸ்டரையும் ரிலீஸ் செய்திருந்தது. தனுஷ் இயக்கிய முதல் படமான பவர் பாண்டி-இல் அவர் ஹீரோவாக நடிக்கவில்லை. ஆனால், D 50 படத்தில் அவரே ஹீரோவாக நடிப்பதோடு, எஸ்ஜே சூர்யா, விஷ்ணு விஷால், சுந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் என செம்ம மாஸ்ஸான கூட்டணியையும் இணைத்துள்ளார்.

முக்கியமாக இப்படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் D 50 படம் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. லேட்டஸ்ட் தகவலாக இப்படத்தில் தனுஷின் அண்ணன் செல்வராகவனும் நடிக்கலாம் எனத் தெரிகிறது. தனுஷுடன் நடிப்பவர்கள் பற்றிய அப்டேட் எதுவும் இதுவரை அபிஸியலாக வெளியாகவில்லை. அதனால், இதுவரை வெளியான தகவல்களில் சில மாற்றங்கள் இருக்கலாம் என தெரிகிறது.

 Dhanush: Dhanushs photo leaked from the D50 shooting spot

D 50 திரைப்படம் வட சென்னையை பின்னணியாக வைத்து கேங்ஸ்டர் ஜானரில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. மேலும், இப்படத்தின் டைட்டில் 'ராயன்' எனவும் கூறப்படுகிறது. சமீபத்தில் திருப்பதி சென்றிருந்த தனுஷ், சாமி தரிசனம் முடிந்ததும் மொட்டை தலையுடன் சென்னை திரும்பினார். இதே மொட்டை தலையுடன் தான் D 50 படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. தற்போது அது உண்மை தான் என்பது உறுதியாகியுள்ளது.

D 50 படப்பிடிப்பில் கலந்துகொண்ட தனுஷின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் படப்பிடிப்புக்காக காரில் வருகிறார் என தெரிகிறது. வெள்ளை சட்டை, மொட்டை தலை என ரியல் கேங்ஸ்டர் லுக்கில் தனுஷ் வலம் வரும் இந்த போட்டோ, அவரது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. இதன்மூலம் D 50 படத்தில் தனுஷ் மொட்டை தலையுடன் நடிப்பதும் உறுதியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X