Dhanush: "இது என்ன ஃபேமிலி போட்டோ மாதிரி இருக்கு.." சரத்குமார், ராதிகாவுடன் தனுஷ்... செம்ம க்யூட்!
சென்னை: தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சரத்குமார், ராதிகா ஆகியோருடன் தனுஷ் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.
சரத்குமார், ராதிகாவுடன் தனுஷ்
தனுஷ் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேப்டன் மில்லர் திரைப்படம், அடுத்த மாதம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படம் பீரியட் ஜானரில் ஆக்ஷன் மூவியாக உருவாகியுள்ளது. கேப்டன் மில்லர் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிந்துவிட்ட நிலையில், விரைவில் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகள் தொடங்கவுள்ளன.

இன்னொரு பக்கம் தனது 50வது படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டார் தனுஷ். D 50 என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. விரைவில் D 50 படத்தின் ரிலீஸ் தேதி உட்பட மற்ற அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை தனுஷே இயக்கியுள்ளார். இது தனுஷ் இயக்கியுள்ள இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், D 50-ஐ தொடர்ந்து மேலும் ஒரு படத்தை இயக்கவுள்ளாராம் தனுஷ். இதில் அவரது உறவினர் வருண் ஹீரோவாக நடிக்கவுள்ளார். தனுஷ் கேமியோ ரோலில் மட்டும் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இதனிடையே ராதிகா, சரத்குமார் ஆகியோரது குடும்பத்துடன் தனுஷ் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது. இதில் தனுஷும் ராதிகாவும் செம்ம க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளனர்.
சரத்குமார், ராதிகா ஆகியோரை தனுஷ் சந்தித்தது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தனுஷ் இயக்கும் புதிய படத்தில் சரத்குமார் முக்கியமான ரோலில் நடிக்க உள்ளாராம். இதுபற்றிய சந்திப்பின் போது தான் தனுஷ், ராதிகா, சரத்குமார் ஆகியோர் போட்டோ எடுத்துள்ளனர். இந்நிலையில் தனுஷின் புதிய படத்தில் சரத்குமார் கமிட்டானது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னியின் செல்வன், வாரிசு, போர் தொழில், பரம்பொருள் போன்ற படங்கள் மூலம் கம்பேக் கொடுத்துள்ள சரத்குமார், தற்போது தனுஷுடன் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் சரத்குமாரின் கேரக்டர் தரமாக இருக்கும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தனுஷ் இயக்கத்தில் சரத்குமார் நடிக்கும் படம் பற்றிய அபிஸியல் அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மினிமம் பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை குறுகிய காலத்தில் முடிக்க தனுஷ் பிளான் செய்துள்ளாராம். பவர் பாண்டி படம் போல ஃபீல்குட் மூவியாக இது இருக்கும் என கூறப்படுகிறது. தனுஷ் இயக்கும் இந்தப் படத்தில் வருண், சரத்குமாருடன் நடிக்கும் மற்ற நடிகர்கள், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











