இந்தியில் மீண்டும், ராஞ்ச்னா போல ‘நல்ல காதல்’ கதைக்காகக் காத்திருக்கிறேன்: தனுஷ்

சென்னை: தனுஷ் நடித்த ஹிந்திப்படமான, ராஞ்ச்னா வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கிறது.

வெற்றிக் களிப்பில் மிதந்து கொண்டிருக்கும் தனுஷ்க்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. ஆனால், முதல் வெற்றி தந்த புகழைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் நிதானமாக அடுத்த கதையை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ்.

இது குறித்து தனுஷ் தெரிவித்ததாவது,

பொருத்தமான கேரக்டர்...

பொருத்தமான கேரக்டர்...

எனக்கு நிறைய வாய்ப்புகள் பாலிவுட்டில் இருந்து வருகின்றன. ஆனால், நான் தான் பொறுமையாக உள்ளேன். எனக்குப் பொருத்தமான கதை கிடைக்கும் போது நிச்சயமாக களத்தில் இறங்கி விடுவேன்.

ராஞ்ச்னா மாதிரி வேணும்...

ராஞ்ச்னா மாதிரி வேணும்...

ராஞ்ச்னா போன்ற கடுமையான அதேசமயம் காதலான கதைக்காக காத்திருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார் தனுஷ்.

கடவுள் அருள்...

கடவுள் அருள்...

மேலும், ராஞ்ச்னா டைரக்டர் ஆனந்த் எல் ராய் பற்றிக் கூறும்போது, ‘ராஞ்ச்னாவின் வெற்றி நாங்கள் எதிர்பார்த்தை விட அதிகமாகக் கிடைத்துள்ளது. எல்லாம் கடவுள் அருள் எனக் கூறியுள்ளார் ஆனந்த்.

திறமையான இயக்குநர்....

திறமையான இயக்குநர்....

தென்னிந்திய நடிகருக்கு இது போன்ற வெற்றிப்படத்தை ஹிந்தியில் உருவாக்கித் தந்த ஆனந்த் உண்மையிலேயே திறமைசாலிதான் என ஆனந்த் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார் தனுஷ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X