தனுஷ், செல்வராகவன் படத்தின் கதை மாற்றம்… காரணம் என்ன தெரியுமா?
சென்னை : நானே வருவேன் படத்தின் தலைப்பு மட்டுமல்ல கதைக்களமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தயாரிப்பாளர் தாணுவுக்கும், தனுஷுக்கும் இந்த கதை பிடிக்காததால் கதையை மாற்றி இருக்கிறார் செல்வராகவன்.
இப்படத்திற்கு ராயன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பில்
ஹாலிவுட் திரைப்படமான தி க்ரே மேன் படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு இந்தியா திரும்பியுள்ளார் தனுஷ். தற்போது இவர் ஹைதராபாத்தில் கார்த்திக் நரேன் இயக்கி வரும் டி43 படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

செல்வராகவன்
தனுஷ் செல்வராகவன் கூட்டணி நானே வருவேன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளது. இப்படத்தை தாணு தயாரிக்க உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ள இப்படத்தில் அர்விந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

கதைக்களம் மாற்றம்
இப்படத்திற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில் நானே வருவேன் படத்தின் தலைப்பை மாற்ற உள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் செல்வராகவன் படத்தின் கதைக்களத்தையே மாற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தாணுவுக்கும், தனுஷுக்கும் நானே வருவேன் கதை பிடிக்காததால் கேங்ஸ்டர் கதையாக அதை மாற்றி இருக்கிறார் செல்வராகவன் .

விரைவில் அறிவிப்பு
மேலும், இப்படத்திற்கு ராயன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதே குழுவினரே இந்த புது கதையிலும் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











