தனுஷின் முதல் தெலுங்கு படத்தின் டைட்டில் நாளை ரிலீஸ் ஆகப்போகுதாம்.. இயக்குநர் யார் தெரியுமா?

சென்னை: கோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என அசத்தி வரும் தனுஷ் அடுத்ததாக டோலிவுட்டிலும் அடியெடுத்து வைக்கப் போகிறார் என அறிவிப்புகள் வெளியாகி வந்த நிலையில், நாளை அந்த படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் உடன் வெளியாக போகிறது.

முதலில் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கப் போகிறார் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது வேறு ஒரு தெலுங்கு இயக்குநர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

வரும் டிசம்பர் 24ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள பாலிவுட் படம் வெளியாகிறது.

ஒடிடி ஹீரோ

ஒடிடி ஹீரோ

நடிகர் சூர்யாவை தொடர்ந்து ஒடிடி ஹீரோ என்கிற டேக் நடிகர் தனுஷுக்கும் வந்து விட்டது. ஜகமே தந்திரம் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ், அக்‌ஷய் குமார் மற்றும் சாரா அலி கான் நடிப்பில் உருவாகி உள்ள கலாட்டா கல்யாணம் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. மாறன் திரைப்படமும் ஒடிடி ரிலீஸ் என்றே தகவல்கள் வெளியாகி வருகின்றன.

முதன்முறையாக தெலுங்கில்

முதன்முறையாக தெலுங்கில்

இந்நிலையில், நடிகர் தனுஷ் அடுத்ததாக தான் ஒரு தெலுங்கு படத்தில் முதன் முறையாக நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் நாளை காலை 9:36 மணிக்கு வெளியாகிறது என்கிற அறிவிப்பை நடிகர் தனுஷ் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பழைய புத்தகங்கள் எஃபெக்டில் அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், பழங்கால திரைப்படமா? அல்லது முன்னாள் காதலியை நினைத்து உருகும் திரைப்படமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளது.

இயக்குநர் யார்

இயக்குநர் யார்

லவ் ஸ்டோரி படத்தை இயக்கிய இயக்குநர் சேகர் கம்முலா படத்தில் தான் தனுஷ் தெலுங்கில் அறிமுகம் ஆகப் போகிறார் என தகவல்கள் வெளியான நிலையில், நாளை வெளியாக உள்ள தெலுங்கு படத்தை டோலிவுட் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கப் போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

யார் இந்த வெங்கி அட்லூரி

யார் இந்த வெங்கி அட்லூரி

2010ம் ஆண்டு வெளியான சினேக கீதம் படத்தில் வசனகர்த்தாவாக அறிமுகமான வெங்கி அட்லூரி. 2018ம் ஆண்டு தோழி பிரேமா படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். 2019ம் ஆண்டு இவர் இயக்கிய மிஸ்டர் மஜ்னு வெற்றி பெற்றது. இந்த ஆண்டு கீர்த்தி சுரேஷ், நிதின் நடிப்பில் வெளியான ரங் தே படத்தையும் இவர் இயக்கி இருந்தார்.

பை லிங்குவல்

பை லிங்குவல்

தனுஷின் நேரடி முதல் தெலுங்கு திரைப்படமான இந்த படம் தமிழிலும் உருவாக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. தனுஷ் நடிப்பில் தற்போது மாறன், திருசிற்றம்பலம், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 உள்ளிட்ட தமிழ் படங்களும் தி கிரே மேன் எனும் ஹாலிவுட் படமும் உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X