Dhanush: அதெல்லாம் பண்றதே தனுஷ் தான்... ஆனால் பெயர் மட்டும் வெளியே வராது... வெளிவந்த ரகசியம்
சென்னை: தனுஷ் நடிப்பில் கடந்தாண்டு வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.
ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தை மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கியிருந்தார்.
இதில் தனுஷுடன் இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் தனுஷுடன் நடித்தது குறித்தும் சில உண்மைகளையும் மனம் திறந்துள்ளார் பாரதிராஜா.

தனுஷின் ரகசியங்களை போட்டுடைத்த பாரதிராஜா:தனுஷ் நடிப்பில் கடந்தாண்டு 5 படங்கள் வெளியாகின. இவைகளில் திருச்சிற்றம்பலம் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, பாக்ஸ் ஆபிஸிலும் 100 கோடி வரை வசூலித்தது. மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கிய இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா ஆகியோர் நடித்திருந்தனர்.
அதேபோல், இயக்குநர் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் இருவரும் முக்கியமான கேரக்டரில் நடித்தனர். பெரிய பலமாக பாரதிராஜாவும், சின்ன பலமாக தனுஷும் நடித்திருந்தது செம்மையாக ஒர்க் அவுட் ஆனது. படம் முழுக்க தனுஷ் - பாரதிராஜா காம்போ மாஸ் காட்டியது. இந்நிலையில் இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்தது குறித்து பாரதிராஜா மனம் திறந்துள்ளார்.
பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டிக் கொடுத்துள்ள பாரதிராஜா, திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷின் நடிப்பைப் பார்த்து வியந்ததாக கூறியுள்ளார். மேலும், படப்பிடிப்பில் தனுஷ் ஒவ்வொரு விஷயத்தையும் ரொம்பவே நுணுக்கமாக கவனித்து வருகிறார். அவரது மண்டையில் அவ்வளவு விஷயங்கள் உள்ளன. எந்த காட்சியில் எப்படி நடிக்க வேண்டும், எங்கே குரலை ஏற்றி இறக்கி வசனம் பேச வேண்டும் என்பதையெல்லாம் அவர் கவனிப்பதாக பாரதிராஜா கூறியுள்ளார்.

முக்கியமாக தான் நடிக்கும் படங்களின் ஸ்கிரிப்ட், பாடல், பிலிம் மேக்கிங் என எல்லாவற்றிலும் தனுஷின் பங்களிப்பு உள்ளது. மொத்தமாக சொல்ல வேண்டுமானால் தனுஷ் நடிக்கும் படங்களை அவர் தான் இயக்குகிறார். ஆனால், இயக்குநர் என்ற இடத்தில் அவரது பெயருக்குப் பதிலாக இன்னொருவரின் பெயர் இருக்கும் என பாரதிராஜா கூறியுள்ளார். தனுஷ் குறித்து பாரதிராஜா பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதேபோல், திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்பில் தனக்கே சில காட்சிகளில் எப்படி நடிக்க வேண்டும் என தனுஷ் தான் சொல்லிக்கொடுத்ததாகவும் பாரதிராஜா கூறியுள்ளார். இளம் நடிகரான தனுஷின் திறமைகளை முன்னணி இயக்குநரான பாரதிராஜா மனம் திறந்து பாராட்டியுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











