Dhanush: “தனுஷால் பேலன்ஸ் பண்ண முடியும்... ரஜினிக்கு இப்பதான் ஞானம் வந்திருக்கு”: சுப்ரமணியம் சிவா
சென்னை: தனுஷ் நடித்த திருடா திருடி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுப்ரமணியம் சிவா.
தொடர்ந்து மேலும் சில படங்களை இயக்கிய அவர், தற்போது நடிகராகவும் பயணித்து வருகிறார்.

தனுஷுக்கு மிக நெருக்கமான இயக்குநர்களில் சுப்ரமணியம் சிவாவும் ஒருவர்.
இதுகுறித்து திருடா திருடி படத்தில் தனுஷ் நடித்தது எப்படி என்பதையும் இயக்குநர் சுப்ரமணியம் சிவா, தமிழ் பிலிமிபீட் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் மனம் திறந்துள்ளார்.
தனுஷால் ரெண்டையும் பேலன்ஸ் செய்ய முடியும்: தனுஷ் கேரியரில் முதல் கமர்சியல் படமாக உருவானது திருடா திருடி. 2003ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை சுப்ரமணியம் சிவா இயக்கியிருந்தார். இதுதான் சுப்ரமணியம் சிவா இயக்கிய முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனுஷ் ஜோடியாக சாயசிங் நடித்த திருடா திருடி சூப்பர் ஹிட் அடித்தது. முக்கியமாக இந்தப் படத்தில் இடம்பெற்ற 'மன்மத ராசா' பாடல் தனுஷை பட்டித் தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.

'மன்மத ராசா' பாடலில் தனுஷின் ஆட்டம் அவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. அதன்பின்னர் தான் கமர்சியல் படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார் தனுஷ். அன்று முதல் இப்போது வரை இயக்குநர் சுப்ரமணியம் சிவா தனுஷுக்கு ரொம்பவே நெருக்கமாக வலம் வருகிறார். தனுஷின் உடன்பிறவாத அண்ணனாக சுப்ரமணியம் சிவாவை கூறலாம். இந்நிலையில், திருடா திருடி படத்தில் தனுஷ் நடித்தது குறித்தும், அவருடனான நட்பு குறித்தும் சுப்ரமணியம் சிவா மனம் திறந்துள்ளார்.
துள்ளுவதோ இளமை வெளியான பின்னர் அதில் தனுஷின் நடிப்பை பார்த்தே திருடா திருடி படத்தில் நடிக்க வைத்ததாக சுப்ரமணியம் சிவா கூறியுள்ளார். தனுஷும் அவரது அப்பாவும் கதை கேட்ட பின்னரே இந்தப் படத்தில் நடிக்க ஓக்கே சொன்னார். ஆனால், படப்பிடிப்புக்கு வந்த பின்னர் இயக்குநரின் நடிகராக மாறிவிடுவார். அவரால் கமர்சியல் ஹீரோ, நல்ல நடிகர் என இரண்டையும் பேலன்ஸ் செய்ய முடிகிறது.

ஆரம்பம் முதலே அவரது நோக்கம் இதுதான் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் எனக் கூறியுள்ளார். அதேபோல், முன்னணி நடிகராக தனுஷ் ரொம்பவே ஹார்ட் ஒர்க் செய்தார். நிறைய புத்தகங்கள் படிப்பதும் சினிமா பார்ப்பதும் தான் அவரை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளதாக இயக்குநர் சுப்ரமணியம் சிவா கூறியுள்ளார். மேலும், அவருக்கு என் மீது இருக்கும் அன்பு நானே எதிர்பாராத ஒன்று தான், அதனை இறுதிவரை தக்க வைத்துக்கொள்வது தான் எனது பொறுப்பு என்றுள்ளார்.
மேலும், எம்ஜிஆர், ரஜினி போல கமர்சியல் ஹீரோவாகவும், கேரக்டருக்கு ஏற்றபடி தனது ஹீரோயிசத்தை மறந்து நடிக்கவும் தனுஷ் தயங்கமாட்டார் எனக் கூறியுள்ளார். எம்ஜிஆர் ரசிகர்களால் வாத்தியார் என அழைக்கப்படுவதற்கு அவர் படங்களில் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிக்காமல் இருந்ததே காரணம். ஆனால், ரஜினி அதனை முழுவதும் மாற்றிவிட்டார், அதேநேரம் இப்போது ஞானம் வந்ததுடம் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்வதாகவும் இயக்குநர் சுப்ரமணியம் சிவா தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











