தனுஷின் நீண்டநாள் கனவு... சூப்பர்ஸ்டார் ரஜினியின் 170வது படத்தை இயக்கும் தனுஷ்?
சென்னை : நடிகர் தனுஷ் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பு மட்டுமின்றி டைரக்ஷன், பாட்டு என பல்வேறு திறமைகளை கொண்டவராக உள்ளார்.
இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 170வது படத்தை தனுஷ் இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பன்முகத் திறமை
நடிகர் தனுஷ் பல சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். இவரது தேர்ந்தெடுத்த கதைத் தேர்வுகள் இவரை சிறப்பான நடிகராக கோலிவுட்டில் அடையாளப்படுத்தியுள்ளது. தொடர்ந்து பாலிவுட், ஹாலிவுட் என வலம் வந்துக் கொண்டிருக்கிறார். நடிகராக மட்டுமின்றி பாடகர், டைரக்டர் என தன்னுடைய பன்முகத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார் தனுஷ்.

பா பாண்டி படம்
மேலும் வொன்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். திரைக்கதை ஆசிரியராகவும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். ராஜ்கிரண், ரேவதி நடிப்பில் பா பாண்டி என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் சிறப்பான வரவேற்பையும் வசூலையும் இவருக்கு பெற்றுத் தந்தது.

இயக்கும் தனுஷ்?
இவர் தனது மாமனாரை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற தனது ஆசையை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் சூப்பர்ஸ்டாரின் 170வது படத்தை தனுஷ் இயக்கவுள்ளதாகவும் படத்தை அவரது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தீபாவளி ரிலீஸ்
தற்போது ரஜினியின் நடிப்பில் சிவா இயக்கியுள்ள அண்ணாத்தே படம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி வரும் நவம்பர் 4ம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. இதையடுத்து தலைவர் 169 படம் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











