ரஞ்சித், ரஜினி படத்தில் கவுரவத் தோற்றத்தில் வருகிறாரா 'மாப்பிள்ளை'?
சென்னை: பா. ரஞ்சித் ரஜினியை வைத்து இயக்கும் படத்தில் தனுஷ் கவுரவத் தோற்றத்தில் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
கபாலி படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பா. ரஞ்சித் மீண்டும் சேர்ந்து பணியாற்றுகிறார்கள். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கக்கூடும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் படத்தில் வித்யா பாலன் நடிக்கவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது.

தனுஷ்
பா. ரஞ்சித், ரஜினி மீண்டும் கூட்டணி சேரும் படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் அவர் இந்த படத்தை தயாரிப்பதோடு நிற்கவில்லையாம்.

கவுரவத் தோற்றம்
மாமா ரஜினியின் படத்தில் தனுஷ் கவுரவத் தோற்றத்தில் வரக்கூடும் என்று கூறப்படுகிறது. ரஜினியை இயக்கும் திட்டமும் தனுஷிடம் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இசை
கபாலி படத்தை போன்றே ரஜினியின் இந்த புதிய படத்திற்கும் சந்தோஷ் நாராயணன் தான் இசையமைக்க உள்ளார். புதிய படத்திற்கான இசை பணியை சந்தோஷ் துவங்கிவிட்டாராம்.

சந்தோஷ்
சந்தோஷ் நாராயணன் தனுஷின் வட சென்னை உள்பட நான்கு தமிழ் படங்களுக்கும், நிவின் பாலி நடிக்கும் மலையாள படம் ஒன்றுக்கும் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











