Dhanush: தனுஷின் D51 படப்பிடிப்பு... திருப்பதியில் வெடித்த சர்ச்சை... போராட்டத்தில் இறங்கிய மக்கள்!

சென்னை: தனுஷ் தற்போது 51வது படத்தில் நடித்து வருகிறார். D51 என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் சில தினங்களுக்கு முன்னர் பூஜையுடன் தொடங்கியது. தனுஷ், நாகர்ஜுன் நடிக்கும் காட்சிகள் தற்போது திருப்பதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனுஷின் D51 படப்பிடிப்பால் திருப்பதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷின் D51 படப்பிடிப்பில் சர்ச்சை: தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகியிருந்தது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் மூவியாக வெளியான கேப்டன் மில்லர் எதிர்பார்த்தளவில் வெற்றி பெறவில்லை. இதனையடுத்து தனது 51வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது தனுஷின் D51.

 Dhanush: Due to Dhanushs D51 shooting... the people who went to Tirupati Hill suffered

டாலர் ட்ரீம்ஸ், ஹேப்பி டேய்ஸ், லீடர், ஃபிடா, லவ் ஸ்டோரி போன்ற படங்கள் மூலம் பிரபலமான சேகர் கம்முலா, தனுஷின் 51வது படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா ஆகியோரும் லீடிங் கேரக்டரில் நடித்து வருகின்றனர், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். D51 திரைப்படம் மும்பை மாஃபியா ஜானர் கேங்ஸ்டர் படமாக உருவாகி வருகிறது.

இந்நிலையில், D51 முதல் ஷெட்யூலில் தனுஷ் - நாகர்ஜுனா சம்பந்தப்பட்ட காட்சிகள் 4 நாட்கள் படமாக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தற்போது திருப்பதியில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கிய D 51 படப்பிடிப்பிற்காக, திருப்பதி மலைப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் திருப்பதி மலைக்கு சென்றுகொண்டிருந்த வாகனங்களை ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சாலை வழியாக அப்பகுதி காவல்துறையினர் திருப்பிவிட்டுள்ளனர்.

இதனையடுத்து அவ்வழியாக திருப்பதி சென்ற மக்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதற்கு கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வேறு வழி இல்லாமல் பழைய பாதையிலேயே வாகனங்கள் செல்ல அப்பகுதி காவல்துறையினர் அனுமதித்துள்ளனர். அதேநேரம் தனுஷின் D 51 படப்பிடிப்பும் திருப்பதியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறதாம். இன்னும் இரு நாட்கள் வரை திருப்பதியில் படப்பிடிப்பு நடைபெறும் என சொல்லப்படுகிறது.

திருப்பதியை தொடர்ந்து மும்பையில் D 51 படப்பிடிப்பை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாம். அங்கு தனுஷ், ராஷ்மிகா மந்தனா இருவரும் நடிக்கும் காட்சிகளை படமாக்க இயக்குநர் சேகர் கம்முலா பிளான் செய்துள்ளார். விரைவில் D 51 படப்பிடிப்பு முடிவுக்கு வரும் எனவும் இந்தாண்டு இறுதிக்குள் படம் ரிலீஸாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X