Kara: தனுஷ் பேச பேச அழுத கர இயக்குநர் மனைவி.. கடவுளுக்கு கேட்குமா கவலைப் படாதே
சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் கர. இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படம் வரும் 30ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் ப்ரோமோசன் வேலைகள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கையில் படத்தின் ப்ரோமோசன் நிகழ்ச்சியில் இயக்குநர் விக்னேஷ் ராஜா குறித்து தனுஷ் பேசி உள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது அவர் பேசுகையில், " இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் மனைவி, வைஷ்ணவி ஒரு நோட்டில் படத்தின் பெயரான கரசாமி என்ற பெயரை ஆயிரத்து ஒரு முறை எழுதி உள்ளார். நாம் சிறுவயதில் ஸ்ரீராம ஜெயம், ஓம் நமச்சிவாய என்று எழுவது போல எழுதி உள்ளார். இதைப் பார்த்த விக்னேஷ் ராஜாவோ இப்படி ஏன் எழுதினாய் என்று கேட்டதற்கு, படத்தின் பெயரை ஆயிரத்து ஒரு முறை எழுதினால் படம் வெற்றி பெறும், அதனால் தான் என்று கூறி உள்ளார்.

எமோஷனல்: அதற்கு விக்னேஷ் ராஜாவோ படத்தின் பெயர் கர, ஆனால் நீ ஏன் கரசாமி என்று எழுதினாய், கர என்றுதானே எழுத வேண்டும் என்று கேட்டுள்ளார். விக்னேஷ் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள் எழுதியது பேனாவில், எழுதப்பட்டது பேப்பரில், ஆனால் எனது கணவர் எப்படியாவது வென்றாக வேண்டும் என்று உருகும் அந்த மனசு இருக்குதுல்ல, அந்த மனசு தான் கடவுளுக்கு கேட்கும், அந்த எண்ணம் தான் கடவுளுக்கு கேட்கும், அந்த மனசு தானே கடவுள். எண்ணம் போல் வாழ்க்கை சிஸ்டர்.
எனது இயக்குநர் என்று நான் மார்தட்டிச் சொல்லும் இயக்குநர்களில் விக்னேஷ் ராஜாவும் இருப்பார் என்று தெரிவித்துள்ளார். அப்போது விக்னேஷ் ராஜாவின் மனைவி கொஞ்சம் எமோஷனலாகி எழுந்து நின்று நன்றி கூறினார். இவரது இந்த பேச்சு தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

படக்குழு: கர படத்தில் மமிதா பைஜு, கே.எஸ். ரவிக்குமார், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தை மையமாக கொண்டு இந்த படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. டீசர் மற்றும் டிரைலர் என இவை அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications