எமோஷ்னலாக பேசிய தனுஷ்.. வழக்கம்போல் வேலையைக் காட்டிய ப்ளூ சட்டை மாறன்! என்னனு நீங்களே பாருங்க!
சென்னை: தனுஷின் 50வது படமான ராயன் படத்தை தானே இயக்கி நடிக்கவும் செய்திருந்தார். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று அதாவது ஜூலை 6ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் பேசிய தனுஷ் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். தனுஷ் எமோஷ்னலாக பேசியதற்கு ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ராயன் படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் தனுஷின் 50வது படம் என்பதால் அவரே இந்தப் படத்திற்கான கதையை எழுதி இயக்கியும் உள்ளார். இந்த படத்தில் செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன், வரலஷ்மி சரத்குமார், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன் என பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ராயன் படம் வரும் 26ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகின்றது.

இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசியதாவது, " முதல் படத்தில் நடிக்கும் பொழுது, நான் இவ்வளவு தூரம் வருவேன் என்று ஒருபோதும் நினைக்கவே இல்லை. அவ்வளவு கிண்டல்கள், கேலிகள், அவமானங்கள், உருவக்கேலிகள், துரோகங்களை தாண்டி இங்கே உங்கள் முன் நிற்கிறேன் என்றால் அதற்கு ரசிகர்களாகிய நீங்கள் கொடுக்கும் கரவொலிதான் முக்கிய காரணம். ஒல்லியாக, கருப்பாக, இருந்த இருந்த என்னை, எப்படி நீங்கள் உங்களோடு கனெக்ட் செய்துகொண்டீர்கள் என்று தெரியவில்லை.
ஹாலிவுட் படம்: இங்கிலீஷ் சரியாக பேச தெரியாத என்னை, இங்கிலீஷ் படத்திலேயே நடிக்க வைத்தீர்கள். ராயன் படத்தின் கதையை படத்தின் தயாரிப்பாளரர் கலாநிதி மாறனிடம் நான் சொன்ன போது, எந்த ஒரு காட்சியின்போதும், எந்தவித ரியாக்ஷனுமே இல்லை. கலாநிதி மாறன் அப்படி இருந்ததால், எனக்குள் ஒருவேளை நம்முடைய கதை நன்றாக இல்லையோ என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டது. ஆனால் முழுக்கதையையும் சொல்லி முடித்த பின்னர், கலாநிதி மாறன் இந்த படத்தை நாம் செய்யலாம் என்று சொல்லிவிட்டார்.

செல்வராகவன்: ஒன்றுமே தெரியாமல் இருந்த என்னை நடிகன் ஆக்கியது என்னுடைய அண்ணனும் இயக்குநருமான செல்வராகவன்தான். அவர்தான் என்னுடைய ஆசான், குரு எல்லாமே. எனக்கு கிரிக்கெட் சொல்லிக் கொடுத்தது, சாப்பிட சொல்லி கொடுத்தது, வாழ்க்கையில் போராட சொல்லிக் கொடுத்தது எல்லாம் அவர்தான். கண்ணம்மா பேட்டையில் ஒரு குடிசை வீட்டில் வாழ்ந்து வந்த என்னை இன்று போயஸ் கார்டனில் உட்கார வைத்திருப்பதும் என்னுடய அண்ணன் செல்வராகவன்" என தனுஷ் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.
ப்ளு சட்டை மாறன்: மேலும், நான் யார் என்பது அந்த சிவனுக்கு தெரியும். என்னுடைய அம்மா அப்பாவுக்கு தெரியும். எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும். என் மனசாட்சி பேச ஆரம்பித்தால் அது ஆபத்தில் முடிந்துவிடும் என பேசினார். தனுஷின் இந்த பேச்சு பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், தனது எக்ஸ் பக்கத்தில், " காலம்: எதுக்கெடுத்தாலும் என்னைத்தாய்யா ஈசியா கோத்து விடறீங்க.." என பதிவிட்டுள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்த பதிவுக்கு இணையவாசிகள் பலரும் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











