மும்பையை குஜிலி மஸ்த் செய்த சென்னை.. ஹாயாக மகன்களுடன் ரசித்த தனுஷ்.. கர படத்துக்கும் அதே நிலைதானாம்
சென்னை: 19 வது ஐபிஎல் தொடர் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மே 2ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் சென்னை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை குஜிலி மஸ்த் செய்துவிட்டது, அதாவது வென்றது. இந்த போட்டியை நடிகர் தனுஷ் தனது மகன்கள் லிங்கா மற்றும் யாத்ரா என இருவருடன் சென்று பார்த்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
நடிகர் தனுஷ் வெறித்தனமான சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர். ஒவ்வொரு சீசனிலும் குறைந்தது இரண்டு முதல் மூன்று மேட்ச்களையாவது ஸ்டேடியத்தில் பார்த்துவிடுவார். அப்படி இருக்கையில் இந்த ஆண்டி ஏற்கனவே ஒரு முறை சென்னை அணியின் போட்டியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பார்த்தார்.
தனுஷ்: இந்நிலையில் ஐபிஎல் தொடரிலேயே மிகவும் முக்கியமான போட்டிகளில் ஒன்றான அதாவது எல்-கிளாசியோ என அழைக்கப்படும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிக் கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் 160 ரன்களை சேஸ் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 18.1 ஓவரில் வெற்றியை குவித்தது. அதாவது மும்பை இந்தியன்ஸ் அணியை இந்த சீசனில் மீண்டும் ஒருமுறை குஜிலி மஸ்த் செய்துவிட்டது.

குஜிலி மஸ்த்: இந்த வெற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் அதன் ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. ஏற்கனவே மும்பையின் சொந்த மைதானத்தில் மும்பை அணியை துவம்சம் செய்திருந்தது சென்னை. இப்படி இருக்கையில் சென்னை அணியின் தீவிர ரசிகரான நடிகர் தனுஷ் தனது மகன்களான லிங்கா மற்றும் யாத்ரா என இருவருடனும் இணைந்து இந்த போட்டியை கண்டு ரசித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் பாக்ஸ் ஆபீஸில் தனுஷ்ஷின் படமான கர படத்தை குஜிலி மஸ்த் செய்து கொண்டு இருக்கிறார்கள். இப்படி இருக்கையில் தனுஷ் தனது மகன்களுடன் இணைந்து சென்னை அணி மும்பை அணியை குஜிலி மஸ்த் செய்வதை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications