மகன்களுடன் உற்சாக கொண்டாட்டம் போட்ட தனுஷ்...மீண்டும் இணைவார்களா?... ஆர்வத்தில் ரசிகர்கள்
சென்னை : நடிகர் தனுஷ் சமீபத்தில் ஐஸ்வர்யாவுடனான விவாகரத்தை அறிவித்துள்ளார். இருவரும் தங்களின் குழந்தைகளுக்காக மீண்டும் இணைய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நடந்த இளையராஜாவின் இசைக் கச்சேரியில் தன்னுடைய மகன்களுடன் தனுஷ் கலந்துக்கொண்டது ரசிகர்களிடம் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

தனுஷ் -ஐஸ்வர்யா விவாகரத்து
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தங்களது 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முறிக்கும் முடிவை சமீபத்தில் வெளியிட்டனர். இவர்களது இந்த முடிவு அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக இருந்தது.

இரு மகன்கள்
இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ள நிலையில் அவர்களுக்காகவாவது இவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்பதே அவர்களை சார்ந்தவர்களின் விருப்பமாக காணப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் இருவரும் தாங்கள் மற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நடைமுறையை கடைபிடித்து வருகின்றனர்.

மனைவியை ப்ரெண்டாக்கிய தனுஷ்
இரு தினங்களுக்கு முன்பு ஐஸ்வர்யாவின் இசை ஆல்பம் வெளியான நிலையில் அதற்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் ஐஸ்வர்யாவை ப்ரெண்ட் என்று அவர் குறிப்பிட்டிருந்தது அனைவரின் விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ளது. இதையடுத்து அவரை நெட்டீசன்கள் வறுத்தெடுத்துவிட்டனர்.

இளையராஜா கச்சேரியில் தனுஷ்
இந்நிலையில் சென்னை தீவுத்திடலில் நேற்றைய தினம் நடைபெற்ற இளையராஜாவின் ராக் வித் ராஜா என்ற இசை நிகழ்ச்சியில் தனுஷ் தனது இரு மகன்களுடன் கலந்து கொண்டார். ராஜாவின் இசை சாம்ராஜ்யத்தை புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்த புகைப்படக்காரர்கள் தனுஷ் மற்றும் அவரது மகன்களையும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க தவறவில்லை.

மகன்களுடன் கொண்டாட்டம்
இந்த கச்சேரியை தனது மகன்களுடன் இணைந்து மிகவும் என்ஜாய் செய்தார். மேடையில் ஏறி தனது மகன்களுக்காக யுவனுடன் இணைந்து பாடலையும் பாடி அசத்தினார். இளையராஜா தன்னுடைய மாமனார் குறித்து பேசியதற்கு மௌனமாக தலையசைத்தார். மொத்தத்தில் இந்த நிகழ்ச்சியில் தனுஷ் அதிகமாக பேசப்பட்டார்.

அதிகமான விமர்சனம்
ஐஸ்வர்யாவுடனான விவாகரத்துக்கு பிறகு அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறார் தனுஷ். அவரின் இந்த முடிவு அவருக்கு அளவிற்கதிகமான மன உளைச்சலை தந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆயினும் தன்னுடைய மகன்களுடன் அவர் சிறப்பான உறவில் உள்ளார். சமீபத்தில் இவரது படப்பிடிப்பில் தனுஷின் மூத்த மகனுடன் காணப்பட்டார். அந்தப் புகைப்படம் வைரலானது போலவே தற்போது இந்த மூவர் கூட்டணி புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











