கன்னடத்துப் பக்கமும் கண்ணு வெச்சுட்டார் நடிகர் தனுஷ்!
சென்னை : நடிகராக கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என தனது எல்லையை விரிவுபடுத்திக் கொண்டேயிருக்கும் நடிகர் தனுஷ், அதே போல தனது தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனத்தையும் மற்ற மொழிகளில் கிளை பரப்ப முடிவு செய்துள்ளார்.
சமீபத்தில், மலையாளத்தில் அறிமுக இயக்குனர்களை வைத்து, 'தரங்கம்' மற்றும் 'மரடோனா' என இரண்டு படங்களை தயாரித்து, அதில் 'தரங்கம்' படத்தை ரிலீஸும் செய்து விட்டார். அந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

தற்போது அடுத்த முயற்சியாக கன்னட திரையுலகம் பக்கம் அவரது பார்வை திரும்பியுள்ளது. கன்னட தயாரிப்பாளர் ஜேக்கப் வர்கீஸ் என்பவருடன் இணைந்து கன்னடத்தில் புதிய படமொன்றை தயாரிக்க இருக்கிறார் தனுஷ்.
இந்தப்படத்தில் கதாநாயகனாக ரிஷி என்பவர் நடிக்க இருக்கிறார். இவர் சூப்பர் ஹிட்டான 'ஆபரேசன் அலமேலம்மா' படத்தின் மூலம் பிரபலமானவர். குறுகிய காலத்திற்குள் பல வெற்றிப்படங்களைக் கொடுத்து வரும் வுண்டர்பார் நிறுவனம் மூலம் தனுஷ் தயாரிப்பாளராகவும் வெற்றிபெற்று வருகிறார்.


Click it and Unblock the Notifications











