கடந்த இரண்டு வருடங்கள்.. இதைத்தான் கற்றுக்கொண்டேன்.. தனுஷ் முன்னாள் மனைவி ஓபனாக சொல்லிட்டாங்களே
சென்னை: கோலிவுட்டில் கடந்த சில காலமாகவே விவாகரத்துகள் அதிகரித்துவருகின்றன. அந்தவகையில் சில வருடங்களுக்கு முன்பு தங்களது பிரிவை அறிவித்த தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் சில நாட்களுக்கு முன்பு சட்டப்பூர்வமாக விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது நீதிமன்றம். இதனால் அவர்களது திருமண பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது. மேலும் அடுத்ததாக அவர்கள் திருமணம் செய்துகொள்வார்களா இல்லை தனியாகவே வாழ்வார்களா என்கிற கேள்வி ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் செலிபிரிட்டிகளின் விவாகரத்து அதிகரித்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் - சைந்தவி, ஜெயம் ரவி - ஆர்த்தி, டி.இமான் - மோனிகா, ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு என அந்த லிஸ்ட் நீண்டுகொண்டு செல்கிறது. இந்த லிஸ்ட்டில் முதலில் இருந்தது தனுஷும்,ஐஸ்வர்யாவும்தான். அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பே தங்களது பிரிவை சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார்கள். காதல் திருமணம் செய்து இரண்டு மகன்களை பெற்ற பிறகு ஏன் இந்த முடிவு என்று பலரும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தார்கள்.

சட்டப்பூர்வ விவாகரத்து: எப்படியாவது சேர்ந்துவிடுவார்கள் என்று பலரும் நினைத்திருந்த சூழலில் சென்னை குடும்பநல நீதிமன்றம் அவர்களுக்கு சட்டப்பூர்வமாக விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. இதனையடுத்து அவர்களது திருமண பந்தம் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த விவாகரத்தால் ரஜினிகாந்த் ரொம்பவே அப்செட்டாகிவிட்டார் என்று கூறப்படுகிறது. மேலும் தனுஷுக்கு அவரது தந்தை கஸ்தூரி ராஜா கண்டிப்பாக இரண்டாவது திருமணம் செய்துவைப்பார் என்றும் கூறப்படுகிறது.
பிள்ளைகள் யாருடன்: இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டாலும் அவர்களின் மகன்களாக யாத்ராவும், லிங்காவும் யாருடன் இருப்பார்கள் என்பது இங்கு முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஆனால் கோ பேரண்ட்டிங் முறையில் அவர்களை தனுஷும், ஐஸ்வர்யாவும் வளர்ப்பார்கள். இருவரிடமுமே இரண்டு மகன்களும் நல்ல புரிதலில்தான் இருக்கிறார்கள். குறிப்பாக இந்தப் பிரிவை அவர்கள் புரிந்துகொள்ளும் பக்குவத்தில் இருக்கிறார்கள். எனவே அவர்கள் இதனை புரிதலோடு கடந்துசெல்வார்கள் என்று கூறப்படுகிறது.
என்ன காரணம்: இதற்கிடையே தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிந்ததற்கு ஏகப்பட்ட காரணங்களை சொல்கிறார்கள் பலர். அவற்றில் முக்கியமாக பார்க்கப்படுவது என்னவென்றால் பண பிரச்னைதான். அதாவது கஸ்தூரி ராஜா வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் இருந்தார். அந்த விவகாரத்தில் ரஜினியின் பெயரையும் கஸ்தூரி ராஜாவுக்கு கடன் கொடுத்தவர் இழுத்துவிட்டார். இதனால்தான் ரஜினி தனுஷின் தந்தையையும், தாயையும் ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவைத்துவிட்டார். இதுதான் முழுமுதல் காரணம் என்று திரைத்துறையினர் கூறுகிறார்கள். ஆனால் இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை.
ஐஸ்வர்யா பேட்டி: இந்நிலையில் தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா அளித்திருக்கும் பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் இப்போது ட்ரெண்டாகியுள்ளது. அதில் அவர், "கடந்த இரண்டு வருடங்களில் நான் கற்றுக்கொண்டது என்னவென்றால் தனிமை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அதேபோல் தனியாக இருப்பதுதான் இருப்பதிலேயே அதிக பாதுகாப்பு தரக்கூடியது என்பதை ரியலைஸ் செய்துகொண்டேன். நிறைய பேர் என்னிடம் உங்களுக்கு BORE அடித்தால் என்ன செய்வீர்கள் என கேட்பார்கள். ஆனால் அந்த BORE உணர்வே எனக்கு வந்தது இல்லை. எனக்கு தனியாக இருப்பதுதான் வசதி. ஆன்மீகமும் தனியாக இருப்பதை ஆதரிக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











