தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் என் தம்பி மரணம்: தனுஷ் இரங்கல்
Recommended Video

சென்னை: தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் தனது ரசிகர் பலியாகியுள்ளதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 17 வயது பள்ளி மாணவி உள்பட 13 பேர் பலியாகினர். பலியானவர்களில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் மைத்துனரும் அடக்கம்.
இந்நிலையில் தனது ரசிகரும் துப்பாக்கிச்சூட்டில் இறந்துள்ளதாக தனுஷ் தெரிவித்துள்ளார். ஹாலிவுட் பட வேலையாக வெளிநாட்டில் இருக்கும் தனுஷ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
துப்பாக்கி சூட்டில் என் நற்பணி மன்ற தம்பி S.ரகு(எ)காளியப்பன் மரணம் என்னை நிலை குலைய வைத்துள்ளது. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் தம்பி குடும்பத்தினரை சந்திக்கிறேன். தம்பி ஆன்மா சாந்தியடைய மிகுந்த வேதனையுடன் இறைவனை வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











