போடு ரகிட.. தனுஷ் படம் ஒடிடியில் வந்தாலும் ‘கட்-அவுட்’ வைப்போம்ல.. தீயாய் வேலை செஞ்ச தீவிர ரசிகர்!

சென்னை: 'கட்-அவுட்' இல்லாமல் தனுஷ் படம் ரிலீஸா? முடியவே முடியாது. ஒடிடியில் வெளியானாலும் என் தலைவனுக்கு நான் 'கட்-அவுட்' வைக்கிறேன் என ரசிகர் ஒருவர் 'கட்-அவுட்' வைத்துள்ளார்.

அந்த வீடியோவை தற்போது நெட்பிளிக்ஸே புரொமோஷன் வீடியோவாக மாற்றி வெளியிட்டு வைரலாக்கி உள்ளது.

முதன்முறையாக ஒடிடியில் தனுஷின் ஜகமே தந்திரம் படம் ரிலீசாக உள்ள நிலையில், பலரும் தங்கள் வீடுகளையே திரையரங்கமாக மாற்றி வருகின்றனர்.

ஒடிடி ரிலீஸ்

ஒடிடி ரிலீஸ்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜோஜு ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ மற்றும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ஜகமே தந்திரம். நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் நாளை உலகம் முழுவதும் இந்த படம் ரிலீசாகிறது.

Recommended Video

Dhanush மட்டும் தான் பண்ணுவரா? நாங்களும் பண்ணுவோம் | Manadu Single Release,STR
தியேட்டர்களாக மாறும் வீடுகள்

தியேட்டர்களாக மாறும் வீடுகள்

முதன் முறையாக நடிகர் தனுஷின் திரைப்படம் ஒடிடியில் வெளியாகவுள்ள நிலையில், தங்கள் வீடுகளையே திரையரங்கம் போல ஏகப்பட்ட ரசிகர்கள் மாற்றி வருகின்றனர். புரொஜக்டர்களை எல்லாம் செட் பண்ணி ஜகமே தந்திரம் படத்தை குடும்பத்துடன் கும்பலாக பார்க்க திட்டமிட்டுள்ளனர்.

கட் அவுட்

தனுஷின் தீவிர ரசிகரான பிபி சாமி எனும் ஓவியக் கலைஞர் ஜகமே தந்திரம் படத்திற்காக சூப்பரான கட் அவுட் ஒன்றை வைத்துள்ளார். தற்போது அந்த வீடியோவை நெட்பிளிக்ஸ் நிறுவனமே தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளது.

வெறித்தனம்தான் போங்க

வெறித்தனம்தான் போங்க

தியேட்டர்ல வெளியானாலும், ஒடிடி தளத்தில் வெளியானாலும் தனுஷ் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பும் பாசமும் ஒரே அளவு தான் இருக்கும் என இந்த ரசிகர் கட் அவுட் வைத்துக் காட்டி நிரூபித்துள்ளார் என ஏகப்பட்ட தனுஷ் ரசிகர்கள் பிபி சாமியை பாராட்டி வருகின்றனர்.

முதல்முறை

முதல்முறை

ஒடிடியில் வெளியாகும் ஒரு படத்திற்கு முதல் முறை கட் அவுட் வைத்தது நம்ம தனுஷ் ரசிகர்கள் தான் என நினைக்கும் போதே உடம்பெல்லாம் புல்லரிக்குது. டிரைலரிலேயே தெறிக்க விட்ட தலைவன் படத்தில் இன்னும் என்னவெல்லாம் செய்து வைத்திருக்க போகிறாரோ என்பதை பார்க்கவே வெறித்தனமாக வெயிட் பண்ணி வருகிறோம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X