Dhanush: தலைவா அவங்கள கல்யாணம் பண்ணிக்கோ.. தனுஷ்க்கு மணப்பெண் பார்க்கும் ரசிகர்கள்.. இதெல்லாம் டூ மச்

சென்னை: நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் ஒரு ஜாம்பவனாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, பாடல்கள் எழுதுவது, பாடுவது என சகலகலா வல்லவனாக வலம் வருகிறார். தனுஷ் தற்போது இரண்டு மூன்று படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படமான குபேரா படத்தின் புரோமோசனில் நடைபெற்ற சில சம்பவங்களை வைத்து ரசிகர்கள் தனுஷ் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

நடிகர் தனுஷ் விவாகரத்து ஆனவர் என்று பலருக்கும் தெரியும். அதாவது, இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் யாத்ரா சமீபத்தில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.

அதே நேரத்தில் அவர்களின் பிரிவு ஒரு புறம் இருந்தாலும், தங்களது மகன்களின் வளர்ச்சியில் இருவரும் நன்கு கவனம் செலுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. இருவரது படங்களின் புரோமோசன்களிலும் மகன்கள் கலந்து கொள்கிறார்கள். இருவருடனும் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் உலா வருகிறது. இது மட்டும் இல்லாமல், யாத்ராவின் பள்ளி கான்வகேஷனில் இருவரும் ஒருசேர கலந்து கொண்டார்கள்.

Dhanush Fan Who Requested To Dhanush Will Marry To Actress Rashmika Mandanna Internet Getting Shock

தனுஷ் தற்போது தனது இந்தி படத்தில் நடித்து வருகிறார். இது மட்டுமல்லாமல் அடுத்த வாரம் வெளிவரவுள்ள படமான குபேரா படத்தின் புரோமோசனில் மிகவும் பிசியாக உள்ளார். இந்நிலையில் இந்த புரோமோசனில் நடைபெற்ற சில சம்பவங்களை கத்தரித்து தனி வீடியோவாக உருவாக்கி தனுஷ்க்கு கோரிக்கை ஒன்றை ரசிகர் ஒருவர் முன்வைத்துள்ளார். அதாவது குபேரா படத்தில் கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்கள். இவர்கள் இருவரும் புரோமோசனில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த புரோமோசனில் தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனாவுக்கு இடையில் நடந்த சில க்யூட் மொமெண்டுகளை ரசிகர் ஒருவர் கத்தரித்து தனி வீடியோவாக உருவாக்கியுள்ளார். இது மட்டுமல்லாமல், அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து, தலைவா கல்யாணம் பண்ணிக்கோ என்று கேப்ஷனும் இட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் அந்த ரசிகரின் கேப்ஷனை பார்த்த பலரும், ரசிகர்கள் என்றாலும் ஒரு அளவுக்குத்தான் . ஆனால் இது எல்லாம் ரொம்பவும் ஓவர் என்றும் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Dhanush Fan Who Requested To Dhanush Will Marry To Actress Rashmika Mandanna Internet Getting Shock

தனுஷ் தற்போது இந்தி படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். குபேராவை அடுத்து அவரது இட்லி கடை படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தனுஷ் எழுதி இயக்கியுள்ளார். இந்த படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. அதேபோல், அவரது நடிப்பில் அடுத்து மூன்று தமிழ் படங்கள் உருவாகவுள்ளது. இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் மாரி செல்வராஜின் ஒரு படம் மற்றும் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு என மூன்று படங்களின் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X