Parasakthi: பராசக்தியை இந்த அடி அடிப்பது விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல.. பங்குக்கு வந்து நிற்கும் தனுஷ் ரசிகர்கள்
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி உள்ள படமான பராசக்தி படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி தியேட்டர்களில் ஓடிக் கொண்டு உள்ளது. படம் சுமார் கிட்டத்தட்ட 150 கோடிகள் செலவில் உருவாக்கப்பட்ட படம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் படம் வெளியாகி நேற்றுடன் அதாவது 13ஆம் தேதியுடன் நான்கு நாட்கள் ஆகிறது. பராசக்தி சிறந்த படமாக உருவாகி இருந்தாலும், பாக்ஸ் ஆபீஸில் முதல் இரண்டு நாட்களைத் தவிர பாக்ஸ் ஆபீஸில் பெரிய அளவில் வசூல் இன்னும் குவிக்கவில்லை.
மேலும் பொங்கல் விடுமுறை என்பது இன்று முதல் தான் தொடங்குகிறது என்பதால் படத்திற்கு ஃபேமிலி ஆடியன்ஸ் இன்று முதல் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. இப்படி இருக்கையில் இணையத்தில் பராசக்தி டிசாஸ்டர் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இப்படி இருக்கையில் இணையத்தில் விஜய் மற்றும் தனுஷ் ரசிகர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதுவும் விஜய் ரசிகர்கள் தான் படத்தை வேண்டும் என்றே திட்டமிட்டு நெகடிவ் நேரேட்டிவ் செட் செய்து வருகிறார்கள் என்றால், அதற்கு தனுஷ் ரசிகர்களுக்கும் பங்கு இருக்கு என்றும் தனுஷ் ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

த்னுஷ் ரசிகர்கள்: அதாவது, சுதா கொங்கரா பராசக்தி தோல்விக்கு காரணம் விஜய் பேன்ஸ்னு சொல்றாங்க. ஆனால் தனுஷ் ரசிகர்களாக நாங்கள் சொல்கிறோம். ஒரு சுதா கொங்கரா இல்ல..ஆயிரம் சுதா கொங்கரா வந்து சொன்னாலும் அதுல பங்கு எங்களுக்கும் இருக்கு..சாரி விஜய் பேன்ஸ்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அஜித் - ரஜினி ரசிகர்கள் சைலண்ட்: இது ஒரு புறம் இருக்க விஜய் ரசிகர்கள் படத்தை முதல் நாளில் இருந்தே ட்ரோல் செய்து வருகிறார்கள். படம் வணிக ரீதியாக பெரிய வெற்றியை நோக்கி நகராததற்கு காரணமே விஜய் ரசிகர்கள், தனுஷ் ரசிகர்கள் மற்றும் சூர்யா ரசிகர்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல் ரஜினி, அஜித், கமல் ரசிகர்கள் இந்த விஷயத்தில் மிகவும் அமைதியாக இருப்பது, பராசக்தி படத்தை ட்ரோல் செய்பவர்களுக்கு கூடுதல் வசதியாக மாறிவிட்டது என்றும் பேச்சுக்கள் கோலிவுட் வட்டாரத்தில் அடிபடுகிறது. பொங்கல் விடுமுறை இன்று முதல் தொடங்குவதால் படத்திற்கு பெரிய அளவில் வசூல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications











