ரெடியா மக்களே... ஜகமே தந்திரம் நாளை ரிலீஸ்… மகிழ்ச்சியில் தனுஷ் ரசிகர்கள் !
சென்னை : தனுஷ் நடிப்பில் உருவான ஜகமேதந்திரம் நெட்பிளிக்ஸ் தளத்தில் 18ந் தேதி எந்த நேரத்தில் வெளியாகும் என்ற தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
Recommended Video
இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.
இத்திரைப்படம் நாளை வெளியாக உள்ளதால் தனுஷின் ரசிகர்கள் அதை கொண்டாட இப்போதே தயாராகி விட்டார்கள்.

ரௌடிசம்
தனுஷ் ரௌடியாக நடித்து நம்மை மெர்சலாக்கிய திரைப்படம் புதுப்பேட்டை. இந்த திரைப்படத்தில் கொக்கி குமாராக நடித்து இருப்பார். இந்த திரைப்படம் தனுஷ் திரைவாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய திரைப்படமாகும். ரௌடிசம், கொலை, ரத்தம் என்று இந்த திரைப்படம் வேறலெவலில் இருக்கும்.

கேங் ஸ்டாராக
ஐகமேதந்திரமும் இப்படி ஒரு கேங்ஸ்டர் திரைப்படம் தான் இந்த திரைப்படத்தில் சுருளி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தனுஷ். சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா என்ற வசனம் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்பை மேலும் அதிகரித்துள்ளது.

பாடல்கள் ஹிட்
Y Not ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனமும் இணைந்த இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு கூடுதல் சிறப்பாக சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, ஹாலிவுட்நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், ஜோஜூ ஜார்ஜ், சஞ்சனா நடராஜன் , அஸ்வந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

எத்தனை மணிக்கு?
இத்திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஜூன் 18ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படம் எந்த நேரத்தில் வெளியாகும் என்ற தகவலையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளார். அதாவது ஜூன் 18ந் தேதி மதியம் 12.30 மணிக்கு வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ரசிகர்கள் கொண்டாட்டம்
வேறு எந்த திரைப்படத்திற்கும் இல்லாத அளவில் ஜகமே தந்திரம் திரைப்படம் 17 மொழிகளில் வெளியாக உள்ளது. நாளை திரைப்படம் வெளியாக உள்ளதால் தனுஷின் ரசிகர்கள் தனுஷின் புகைப்படத்தை பகிர்ந்து இப்போதிலிருந்தே கொண்டாட்டத்திற்கு தயாராகி விட்டார்கள்.


Click it and Unblock the Notifications











