Kara FDFS Celebrations: கரசாமி பந்தயம் அடிக்கிறான்.. ரசிகர்களின் ஆரவார கொண்டாட்டமும் எதிர்பார்ப்பும்
சென்னை: இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் கர. தனுஷ், மமிதா பைஜு, சுராஜ் வெஞ்சரமூடு, கருணாஸ், கே.எஸ். ரவிக்குமார், பிரித்வி பாண்டியராஜ் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படம் ஏப்ரல் 30ஆம் தேதியான இன்று வெளியாகிறது. படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வரவேற்று வருகிறார்கள். மேலும் சிலர் இணையத்தில் தங்களது எதிர்பார்ப்புகளை பதிவிட்டு வருகிறார்கள்.
தனுஷ் படம் வருகிறது என்றாலே அவரது ரசிகர்களை கடந்து சினிமா ரசிகர்களுக்கும் ஒருவித குஷி ஏற்பட்டு விடுகிறது. காரணம் தனுஷ் எப்படியும் ஒரு நல்ல கதையை தேர்வு செய்துதான் நடிப்பார் என்ற நம்பிக்கையை பல படங்களில் அவர் ஏற்படுத்தி உள்ளார். போர் தொழில் போன்ற தரமான படத்தைக் கொடுத்த இயக்குநர் விக்னேஷ் ராஜாவுடன் இணைந்து இவர் பணியாற்றுகிறார் என்றதும் எதிர்பார்ப்புகள் எகிறிவிட்டது.

ஒரு தியேட்டரில் தியேட்டர் உயரத்திற்கு கட்-அவுட் வைக்கிறார்கள். ஒரு நெட்டிசனோ, படத்திற்கு டிக்கெட் பதிவு செய்துவிட்டு, அதைப் பகிர்ந்து, எல்லாம் உங்களுக்காக தனுஷ் அண்ணா என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவரோ, கரசாமி பந்தயம் அடிக்கிறான் என்று பதிவிட்டுள்ளார்.
எதிர்பார்ப்பு: மற்றொரு இணையவாசியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை விவரித்து எழுதி உள்ளார். அதாவது, " இன்னைக்கு ரிலீஸ் ஆகுற பெரிய படம், ஆனா அதுக்கு ஏத்த எதிர்பார்ப்பு இருக்கான்னு கேட்டா கொஞ்சம் சந்தேகம் தான். ஆனா சந்தேகம் இல்லாத ஒரு எண்ணம் படம் எப்படியும் தரமா இருக்கும்னு தான் தோனுது. காரணம் இயக்குனர், போர்தொழில்னு ஒரு தரமான படம் கொடுத்த இயக்குனர், அதுவும் அந்த படம் தமிழ் சினிமாவின் ஒரு அடையாளமா மாறி நிக்குது. அதுக்கு பிறகு வர்ற படம் , அந்த படம் பக்கா திரில்லர்னா இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ராவான கதையோட வருது.டிரைலர் குடுத்த தாக்கம் ரொம்ப பெருசு.
அழுத்தமான படைப்பு: இயக்குனரின் பேட்டி கொடுக்கும் இன்னும் பெருசு. மனுசன் மத்த படங்களையே ஆணி வேரா அக்கு வேரா பிரிச்சுட்டு இருக்காப்ல. இதுல தன்னோட படத்தை சரியா எடுக்காம விடுவாரா என்கிற கேள்வி தான் நிக்குது. இந்த கர - கண்டிப்பா தமிழ் சினிமாவின் இன்னொரு அழுத்தமான படைப்பா இருக்கும்னு நம்பிக்கை இருக்கு. காத்திருப்போம் என்ன மாதிரியான தாக்கத்தை உண்டாக்குதுன்னு" என்று பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் படத்தை ஆரவாரத்துடன் வரவேற்க தயாராகிவிட்டனர்.


Click it and Unblock the Notifications