நோ பேனர்.. சொல்லாமல் செய்துகாட்டிய தனுஷ் ரசிகர்கள்.. அசுரன் படத்திற்காக செய்த அசத்தல் சமூக சேவை!
Recommended Video
நெல்லை: அசுரன் படத்தை முன்னிட்டு தனுஷ் ரசிகர்கள் செய்த சமூக சேவை ஒன்று இணையம் முழுக்க பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னையில் கடந்த மாதம் சுபஸ்ரீ என்ற இளம்பெண் தன் இருசக்கரவாகனத்தில் ரோட்டில் செல்லும் போது அங்கு வைக்கப்பட்டு இருந்த பேனர் அவர் மீது விழுந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு பொது இடங்களில் பேனர் வைக்க கூடாது என்று மக்களிடம் இருந்து பல கண்டனங்கள் எழுந்தன.
சுபஸ்ரீ மரணத்திற்கு பின் நடிகர்கள் விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல்வேறு சினிமா பிரபலங்களும் இனி தங்கள் படம் ரிலீஸை யொட்டி பேனர் வைக்க வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.

தனுஷ் ரசிகர்கள்
இந்த நிலையில் தனுஷ் நடித்து இன்று வெளியாகியிருக்கும் "அசுரன்" திரைப்படத்திற்காக யாரும் பேனர் வைக்க கூடாதென்று தனுஷ் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தனர். அரசுன் படத்திற்கு பேனர் வைப்பதை தவிர்த்துள்ள நெல்லை மாவட்ட தனுஷ் ரசிகர்கள், கட் அவுட் வைப்பதற்குப் பதிலாகத் திருநங்கைகளுக்குத் தையல் மிஷின் கொடுத்து அசத்தியுள்ளனர்.

தையல் மிஷின்
இதற்கான விழா பெரிய அளவில் நெல்லையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன் பங்கேற்று திருநங்கைகளுக்குத் தையல் இயந்திரங்களை வழங்கியுள்ளார்.தனுஷ் ரசிகர்களின் இந்த செயல் பொது மக்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தனுஷ் எப்படி
தனுஷ் ரசிகர்கள் செய்த இந்த விஷயம் மக்களிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளது.சமீபத்தில் ‘காப்பான்' வெளியானபோது இதே நெல்லையில் சூர்யாவின் ரசிகர்கள் ஹெல்மெட்டுக்களை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன வேண்டுகோள்
இதேபோல் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய் படங்கள் வெளியாகும்போது அவர்களுடைய ரசிகர்களும் இதுமாதிரி நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என்று பலர் இணையத்தில் கோரிக்கை வைத்துள்ளனர். பிகில் படம் வெளியாகும் போது விஜய் ரசிகர்கள் இதேபோல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











