மறந்துட்டீங்களா, மறந்தால் போராட்டம் வெடிக்கும்: எச்சரிக்கை போஸ்டர் அடித்த தனுஷ் ரசிகர்கள்
சென்னை: ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தனுஷ் ரசிகர்கள் கண்டன போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.
தனுஷ் அசுரன் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். இந்நிலையில் அவர் ரசிகர்களை மறந்துவிட்டதாகக் கூறி கண்டன போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

அந்த போஸ்டரில் கூறப்பட்டிருப்பதாவது,
இவன் எல்லாம் ஒரு ஹீரோவா? இவனுக்கெல்லாம் ஒரு ரசிகர் மன்றமா? என ஆரம்பத்தில் பல அவமானங்களை தாண்டி நின்றவர்கள் நாங்கள்! ரசிகர்களை நீக்குவதற்கு சிவாவும், ராஜாவும் யார்!!

பல தோல்விகளிலும் என்னை தாங்கிப் பிடித்த தூண்கள்! என் ரசிகர்கள்!! என் ரசிகர்களை எக்காரணம் கொண்டும் நான் கைவிடமாட்டேன்! என்று சொன்னாயே தலைவா!! ஆனால், உங்களுக்காக உழைத்த ரசிகர்களை மறந்துவிட்டீர்களா!!
நாங்களா? உங்களை தனுஷ்-காக கட்அவுட், பேனர், போஸ்டர் என செலவு செய்ய சொன்னோம் என ஆணவத்தோடு பேசிய டச்அப்மேன் எச்ச ராஜா மீது நடவடிக்கை எடு!
தலைவன் தனுஷ்! நடவடிக்கை எடுக்காவிட்டால் எந்த தியேட்டரிலும் ரசிகர்கள் கொண்டாட்டம் இல்லாதபடமா என சொல்ல வைத்துவிடாதீர்கள்.
நீங்கள் மறந்தால், போராட்டம் வெடிக்கும் என்று ரசிகர்கள் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











